12 ராசியினரில் யாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே...!

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. விருந்தினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் யாரிடம் பேசும்போதும் நிதானமாக பேசுவது மிகவும் நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

வங்கிக்கடன் மிக எளிதாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.உறவினர்கள் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும்.பங்கு வர்த்தகத்தில் நீங்கள் இருந்தால் அதன் மூலம் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே...!

இதுநாள் வரை இருந்து வந்த மனக்குழப்பம் மெல்ல மெல்ல நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான ஒரு சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் நட்பு வட்டம் அதிகரிக்கும். வாகனம் செலவு ஏற்படலாம்.

கடக ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து செய்து உதவிகரமாக இருப்பார்.

சிம்மராசி நேயர்களே...!

எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம்.தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வரும். பணம் நகையை கவனமாக கையாள வேண்டியது அவசியம். முக்கிய காரியங்களில் நிதானமாக செயல்பட வேண்டும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய மன தைரியம் அதிகரிக்கும். கேட்ட இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். மேலும் வாகனங்களை வாங்க முற்படுவீர்கள். அடகு வைத்த நகையை மீட்க முடிவு செய்வீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

பழைய நிலத்தை விற்று புதிய வீடு வாங்குவது குறித்து யோசனை மேலோங்கும். இழுபறியாக இருந்து வந்த வழக்கில் வெற்றி அடைவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவி மற்றும் ஆலோசனைகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.

விருச்சிக ராசி நேயர்களே....!

வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். சிலர் வீடு விட்டு வேறு வீடு மாற வாய்ப்பு உண்டு.தூரத்து உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். தாய்மாமன் வகையில் உங்களுக்கு உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு ராசி நேயர்களே...!

உங்கள் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முற்படுவீர்கள். பூர்வீக சொத்தை விற்க யோசனை வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அயல்நாடு செல்ல விசா விண்ணப்பிக்க ஓர் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப்பெறும்.

மகர ராசி நேயர்களே...!

வீடு கட்ட அரசு அனுமதி கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களது நல்ல மனதை புரிந்து கொண்டு அன்பாக பழகுவார்கள். உடல்நிலை சீராகும். நீங்கள் எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

வீடு மனை வாங்க கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. பணப்புழக்கம் கணிசமாக நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சாமர்த்தியமாகப் பேசி எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பீர்கள்.

மீன ராசி நேயர்களே..! 

யாரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். யாருக்காகவும் எந்த உத்திரவாதமும் கொடுக்காதீர்கள்.