12 ராசியினரில் வீடு வாகனம் வாங்க யாருக்கு லக் உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..! 

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை நண்பர்கள் அதிகரிப்பார்கள். சிக்கனமாக செலவழித்து வாழ்க்கையை நடத்துவது.வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து தீவிரமாக யோசிப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

உடன்பிறந்தவர்களால் சில உதவி உங்களுக்கு கிடைக்கும். வீடு வாகனம் வாங்குவீர்கள். பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற திட்டமிடுவீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடக ராசி நேயர்களே...!

அத்தியாவசிய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அடுத்தடுத்து சில திட்டங்களை தீட்டி வாழ்க்கையில் அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே....!

பல புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சமூகத்தில் பிரபலமான ஒருவருடன் எதிர்பாராத சந்திப்பு நடக்கும். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். முக்கிய விவகாரங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.

கன்னி ராசி நேயர்களே...!

கனிவாக பேசி பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

துலாம் ராசி நேயர்களே...!

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என முடிவு எடுக்கக் கூடிய நபர் நீங்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்ற முடிவு எடுப்பீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்க வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் கூட அதற்கேற்றவாறு நனமை கிடைக்கும். உங்களது சகோதரர் உதவி செய்ய முன் வருவார்.

தனுசு ராசி நேயர்களே..!

மிகவும் சாதுர்யமாக பேசி அனைவரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். செய்ய வேண்டிய வேலையை  சாமர்த்தியமாக செய்து காட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.
எதிர்பார்த்து காத்திருந்த தொகை உங்கள் கைக்கு வந்து சேரும்.

மகர ராசி நேயர்களே...!

சுறுசுறுப்புடன் செயல்பட்டு முடிக்கப்படாமல் இருந்த வேலையை விரைவாக முடிப்பீர்கள். அழகு இளமை கூடிக்கொண்டே புதிய பொலிவுடன் காணப்படுவீர்கள்.ஆடை ஆபரணம் வாங்குவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மகிழ்ச்சி தரும் விஷயம் நடக்கும்.

மீன ராசி நேயர்களே...!

முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் காட்டவேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது. ஆடம்பர செலவுகளல் சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.