12 ராசியினரில் "வாயை சற்று அடக்கி வாசிக்க வேண்டியவர்கள்" யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

குடும்பத்தினருடன் இருந்து வந்த ஈகோ பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தேவையில்லாமல் மற்றவர்களின் பிரச்னையில் தலையிட வேண்டாம். யாரிடமும் கோபமாக பேசுவது கூடாது.

ரிஷப ராசி நேயர்களே..!

வாகன செலவு வைக்க வாய்ப்பு உண்டு. அலைச்சல் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களுக்கு டென்ஷன் தரும் வகையில் நடந்து கொள்வார்கள். பல பிரச்சினைகள் தலைதூக்கும். ஆன்மீகம் தியானத்தில் சற்று சிந்தனை செலுத்தினால் நன்று.

மிதுன ராசி நேயர்களே...!

உற்சாகமாக சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிந்தனை திறன் அதிகரிக்கும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் உடல்நலம் சீராக இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த அன்னோன்யம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். நண்பர்கள் விருந்தினர் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சில் சற்று நிதானம் தேவை.

சிம்மராசி நேயர்களே...!

சோர்வு கோபம் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மனைவி குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை முக்கியமாக கருதுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முன் வந்து உதவுவார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிலும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் குறை சொல்லிக்கொண்டே இருப்பது நல்லது கிடையாது. கோபப்பட்டால் கண்டிப்பாக பகை உண்டாகும்.

துலாம் ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி ஆனந்தம் பிறக்கும். மருத்துவ செலவுகள் குறையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

சில முக்கிய வேலைகளை சாதுர்யமாக செயல்பட்டு முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான ஒரு சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் செலவு இருந்தாலும் ஆதாயமும் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

சகோதரர் வகையில் உங்களுக்கு ஆதாயமுண்டு. கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். பல பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். உறவினர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் மரியாதை உயரும். நல்ல நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பொது வேலையை சிறப்பாக செய்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

தோற்றப் பொலிவு அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி, ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும். வாயை அடக்கி வாசிப்பது நல்லது. எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.