12 ராசியினரில் யாருக்கு "கடைசி நேரத்தில் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்" தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு பண வரவு இருக்கும். பிள்ளைகளால் என்றும் பெருமை உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் நீங்கிவிடும். வருங்கால நலன் கருதி சில முக்கிய முடிவை எடுப்பீர்கள்.

 ரிஷப ராசி நேயர்களே...!

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் நாள். இல்லம் தேடி சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுடைய அனுபவ பூர்வமான அறிவால் பல நல்ல திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். மாலை நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

கடக ராசி நேயர்களே...!

வங்கிகளில் சேமிப்பு உயரும். சகோதரர் உங்களுக்கு உதவி செய்வார். தொலைந்து போன ஒரு பொருள் உங்களுக்கு கிடைக்கும். வாகன மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு பண வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பல செல்வந்தர்கள் உங்களுக்கு நண்பர்களாக அறிமுகமாவார்கள். பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனை அகலும். தொலைதூரத்து பயணத்தின் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

தேவைகள் அனைத்தும் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சகோதர வகையில் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் உதவி செய்யமாட்டார்கள். குடும்ப சுமையை அதிகரிக்கக் கூடும்.

விருச்சக ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றம் அடைவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

சாமர்த்தியமாக பேசி  சமாளிப்பீர்கள். செலவு அதிகரிக்க கூடும். பிரபலமானவர்கள் உங்களை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சியாக இருப்பீர்கள்.  

மகர ராசி நேயர்களே..!

உங்களுடைய செல்வாக்கு உயரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களை செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

கும்ப ராசி  நேயர்களே..!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த காரியம் விரைவில் முடியும். உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். துரிதமாக சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

மீன ராசி நேயர்களே..!

நீண்டதூர பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடைபெறும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.