12 ராசியினரில் "நெளிவு சுளிவுகளை" தெரிந்துக்கொள்ளும் நபர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வு நீங்க இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைக்கவேண்டும். சகோதரர் உங்களுக்கு உதவி செய்வார்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மிகப் பெரியவர்கள் உங்களுக்கு ஆசி வழங்குவார். பழைய கடனை பைசல் செய்வது குறித்து தீவிரமாக சிந்திப்பீர்கள். மற்றவர்களின் உதவியை நாடி உங்கள் நெருங்கியவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகனச் செலவு வைக்க நேரிடலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

பிள்ளைகள் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு பெருமை கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு நாளுக்கு நாள் உயரும்.

கடக ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களிடம் வாங்கியிருந்த பணத்தை திருப்பி செலுத்த எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாத ஓர் நிலை ஏற்படும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. உங்களுக்கு பிடித்த கலைப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

மூத்த சகோதரர் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார். தாயார் உங்களை ஆதரித்து பேசுவார். பழைய சொத்துப் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

அதிகார பதவியில் இருப்பவர்கள், உங்களுக்கு அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயநலத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் நீங்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது.

மகர ராசி நேயர்களே...!

வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். பல பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பது குறித்து சிந்திப்பீர்கள். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும்.

கும்பராசி நேயர்களே...!

புதியவர்களின் நட்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களது நட்பு வட்டாரம் அதிகரிக்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். 

மீன ராசி நேயர்களே ...! 

முன் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர் விவகாரங்களில் அனாவசியமாக தலையிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாயை அடக்கி வாசிப்பது  நல்லது.