12 ராசியினரின் இன்றைய நிலை இதுதான்...! பார்த்து நடத்துக்கோங்க..! 

மேஷ ராசி நேயர்களே...!

பல ஏமாற்றங்களை தாண்டி இன்று உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். புதிய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் எப்போதும் உங்களுக்கு தனி மரியாதை உண்டு.

ரிஷப ராசி நேயர்களே...!

விருந்தினர் வருகையால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிள்ளைகளை நல் வழிபடுத்துவீர்கள். அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடலாம். 

மிதுன ராசி நேயர்களே..! 

உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ கூடிய நாள்.  கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்

 

கடக ராசி நேயர்களே..! 

வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். திடீரென எதிர்பாராத செலவுகள் வரலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வருவதால் சமாளித்து விடுவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். அலைச்சல் உண்டாகும் 

சிம்ம ராசி நேயர்களே...!

நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வருவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்கள் பேச்சில் பொறுமை தேவை.

கன்னி ராசி நேயர்களே...!

சகோதரர் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார். குடும்பத்தில் கலகலப்பான சில விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

சிக்கனமாக இருக்கவேண்டும் என நினைத்து மிக குறைவாக செலவு செய்தாலும் உங்களுக்கு தவிர்க்கவே முடியாத சில செலவுகள் வரும். யாரிடமும் வீண் பேச்சு வேண்டவே வேண்டாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். புதிய ஒரு நபரால் உங்களுக்கு கட்டாயம் உதவி கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய முயற்சி செய்யுங்கள். நண்பர்கள் உதவி உங்களுக்கு தேவை இல்லாத நாள். பழைய கடனை தீர்க்க புதிய முயற்சி ஒன்றை இருப்பீர்கள். ஆனால் அனைத்திலும் நிதானம் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது.

தனுசு ராசி நேயர்களே...!

குழப்பத்தில் இருந்துவந்த நீங்கள் யோசித்து சில முக்கிய முடிவை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்ய நேரிடலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்க நேரிடும்.

மகர ராசி நேயர்களே...!

குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அரசு சார்பாக உங்களுக்கு நல்ல செய்தி வந்து அடையும். பொருள் வரவு காணப்படும்.

கும்ப ராசி நேயர்களே...!

கவலை அச்சம் அவ்வப்போது வந்து உங்களை சோகத்தில்  மூழ்கவைத்தாலும் நம்பிக்கை உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மீனராசி நேயர்களே...!

மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அடுத்தவர்கள் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள்.