12 ராசியினரில் " நினைத்ததை முடிக்கும் நபர்" யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு யோகமான நாளாக அமையும். எதிலும் வெற்றி கிடைக்கும். லாபம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்களது பொருளாதாரம் நாளுக்கு நாள் உயரும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

நட்பால் நல்ல காரியம் உங்களுக்கு ஏற்படும். மனதில் புதிய புதிய சிந்தனைகள் தோன்றும்.  தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி உங்களுக்கு வரும்.

கடக ராசி நேயர்களே..!

அமைதியாக சில வேலைகளை செய்து காட்டுவீர்கள். ஆனால் அலைச்சல் அதிகரிக்கக்கூடும். சிலவற்றை மறந்து அதனால் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உடல்நலனில் அக்கரை தேவை.

சிம்மராசி நேயர்களே..!

எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் மிகவும் கடினப்பட்டு செய்து முடித்துக் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பழைய கடன் வசூல் செய்து விடுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை காண்பிக்க வேண்டும். பாதியில் நின்ற கட்டிடப் பணியை தொடர்ந்து செய்ய வாய்ப்பு ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே...!

வழக்குகள் சாதகமாக முடியும். வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். உங்களுக்கு நிம்மதியை கொடுக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

அன்பு நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடு இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி கொடுக்கும்.

மகர ராசி நேயர்களே...!

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆரோக்கியம் சீராக இருக்கும். திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காக இருக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

செலவு சற்றுக் குறைய வாய்ப்பு உள்ளது. இடமாற்றம் ஊர் மாற்றம் குறித்து கவலை வந்து போகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம். பயணம் பலன் தரும்.

மீனராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு லாபகரமான நாள். உங்களுக்கு பிடித்த வேலையை செய்து முடிப்பீர்கள்.  வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் நிலையை அடைய சந்தர்ப்பம் கூடிவரும் கூடிய நாள்.