12 ராசியினரில் வீடு வாங்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும் நாள் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும் காலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது

ரிஷப ராசி நேயர்களே..!

பதவி வாய்ப்புகள் பரிசீலனையில் இருக்கும். நண்பர்கள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள். வெளிநாட்டு நட்பு உங்களுக்கு உதவியாக அமையும். உங்களைத் தேடி வரன்கள் வரும் 

மிதுன ராசி நேயர்களே..!

யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது ஒரு முறைக்கு பாலமுறை யோசனை செய்வது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றி மறைந்து விடும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

கடக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். குடும்ப நலன் கருதி ஒரு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுமனை பற்றி சிந்திப்பீர்கள். வேலையில் மாற்று வேலையை குறித்து சிந்தனை அடிக்கடி வரும். திருமண முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

எதிர்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். எடுத்த முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

அன்பு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். அயல்நாட்டு முயற்சி உங்களுக்கு வெற்றியை தரும்.

துலாம் ராசி நேயர்களே...!

தாய்வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை நாடிவரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு. சேமிப்பு உயர வாய்ப்பு ஏற்படும்.

விருச்சக ராசி நேயர்களே...!

பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கக்கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து செயல்படத் தொடங்குவார்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்களிடம் பேசுவார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

ஆதாயம் அதிகரிக்கும் நாள். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி உங்களுக்கு கிடைக்கும். வீடு வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

பண வரவு அதிகரிக்கும். ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

சாமர்த்தியமாக பேசி பல வேலைகளை முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உங்களுக்குள் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். விலகிச் சென்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

மீனராசி நேயர்களே...!

நாளுக்கு நாள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். முறையான தொழிலில் தோன்றிய எதிர்ப்பு மறையும்