12 ராசியினரில் நீண்ட நாள் நண்பரை சந்திக்க போவது யார் தெரியுமா ..!

மேஷ ராசி நேயர்களே...!

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். சில காரியங்களை செய்ய மறந்து வேறு ஒரு பணியை செய்து விடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

முன்னோர்கள் வழிபாட்டால் முன்னேற்றம் அடைவீர்கள். நேற்றைய பிரச்சினை இன்றும் இருக்கும். இருந்தாலும் அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீட்டை சீரமைப்பதில் உங்களுக்கு ஆர்வம் பிறக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாளாக அமையும். உங்களை நம்பி வந்தவர்களை கைவிடாமல் அவர்களுக்கு உதவி செய்வீர்கள். திருமண முயற்சி கைகூடும். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு தேவையான அனுகூலம் நடக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயத்தை செய்து முடிப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

வழிபாட்டால் வளர்ச்சி அடைய வேண்டிய நாள் இது. உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலம் சீராக உணவில் கட்டுப்பாடுகள் நல்லது.

சிம்ம ராசி நேயர்களே..! 

தொடர்ந்து வெற்றி அடைந்து வருவதால் துணிச்சல் அதிகரிக்கும். கடன் சுமை மெல்ல மெல்ல குறையும். உங்கள் பிள்ளைகளால் இப்போது உங்களுக்கு பெருமை மட்டுமே. மகத்தான காரியங்களை செய்து சாதாரணமாக முடிப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். வீட்டுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயனடைவீர்கள். நீண்டநாள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.

துலாம் ராசி நேயர்களே...!

வாழ்க்கை தரம் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள் இது. நல்ல தகவல்களை நண்பர்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கப் பெறும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை நாளுக்கு நாள் அதிகரிக்கும். 

விருச்சிக ராசி நேயர்களே..!

இல்லத்தில் மங்கள நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உண்டு.  வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். திட்டமிட்ட காரியம் இனிதே செய்து முடிப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி அதிகரிக்கும். புதியவர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு அதிகரிக்கும்.
உடல் நலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.

மகர ராசி நேயர்களே...!

விரோதிகள் மெல்ல மெல்ல உங்களை விட்டு விலகுவார்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணத்தில் உங்களுக்கு பிடித்த ஒரு நண்பரை சந்திக்க கூடிய நிலை ஏற்படலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

பணம் பல வழிகளில் உங்களை வந்தடையும். பக்கபலமாக இருப்பவர்கள் நாளுக்கு நாள்  உங்களுக்கு அதிகமாகுவார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேச பயணம் அனுகூலம் தரும் 

மீனராசி நேயர்களே...!

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். பாதியில் நின்ற பணிகள் சுறுசுறுப்போடு செய்து முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் உங்களுக்கு இன்று இருக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்