பெரிய பிரச்சனைக்கு புதிய கோணத்தில் தீர்வு கிடைக்கும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

வருங்காலத்திற்காக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

சில நாட்களாக மன உளைச்சல் டென்ஷன் இருந்திருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது புகழ் அதிகரிக்கும். சொந்தங்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். பழைய கடனை பைசல் செய்து விடுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான ஒரு சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள்.

கடகராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். அக்கம்பக்கத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

சிம்மராசி நேயர்களே..!

வருமானத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்து ஒன்றை விற்று புதிய வீடு வாங்க முற்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை எடுபடும்.

கன்னி ராசி நேயர்களே..!

குலதெய்வப் பிரார்த்தனை மேற்கொள்வீர்கள். வீட்டை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். கடனை தீர்க்க உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மறைமுக எதிர்ப்பு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பண வரவு இருக்கும். வாகனச் செலவு ஏற்படலாம்.

தனுசு ராசி நேயர்களே..!

சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். 

மகர ராசி நேயர்களே..!

வாகனம், வீடு வசதி வாய்ப்பு பெருகும். பிள்ளைகளால் உங்களது புகழ் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

முன் கோபத்தை கட்டுப்படுத்துங்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிர்பாராத பண வரவு இருக்கும். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மீனராசி நேயர்களே..!

அரசாங்க வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் உங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.