12 ராசியினரில் அதிக மகிழ்ச்சி அடையப்போகும் நபர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படும் நாள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிக்கனமாக செலவழித்து பணத்தை சேமிக்க கற்றுக்கொள்வீர்கள். அரசாங்க வேலையில் இருந்து வந்த பின்னடைவு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். எப்படியும் ஒரு வேலையை செய்து முடிக்கவேண்டும் என மும்முரமாக செயல்பட்டு வருவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. எடுத்த காரியங்களை எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு தேடி வரும்.

கடக ராசி நேயர்களே...!

எதையும் மிக எளிதாக பேசி அனைவரின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் நபர் நீங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கலாம்.

சிம்ம ராசி நேயர்களே....!

ஒரு சில வேலைகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். விமர்சனங்களை கண்டு கொஞ்சமும் பயப்பட வேண்டாம்.

கன்னி ராசி நேயர்களே...!

அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர்கள் நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படலாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுங்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் உங்களுக்கு வந்து சேரும். சகோதரர் உங்களுக்கு உதவி செய்யலாம்.

விருச்சக ராசி நேயர்களே...!

மனதில் நிலவிய பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடு நீங்கும். பண வரவு திருப்தியாக இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே..!

குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சி செய்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் பொதுவாக காணப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டிய நிலை உருவாகும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடுவது மிகவும் நல்லது. முக்கிய விஷயங்களில் கையெழுத்திடுவதை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது.

கும்பராசி நேயர்களே...!

அதிரடியாக சில திட்டங்களை தீட்டுவீர்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். உங்களை தேடி வந்து உதவி கேட்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

முகப்பொலிவு அதிகரிக்கும். துரிதமாக செயல்பட்டு சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் பெருமை உண்டாகும்.