12 ராசியினரில் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டியவர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!
 
குடும்ப உறுப்பினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உங்களுக்கு தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி வந்து சேரும்.

ரிஷப ராசி நேயர்களே...!

லாபம் தரும் தொழிலில் இறங்குவீர்கள். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். வாழ்க்கை தரம் உயரும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே..!

அடுத்தவருக்கு உதவ முன்வருவீர்கள். நல்ல தகவல்களை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவீர்கள்.  
வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் புகழ் ஓங்கும்.

கடக ராசி நேயர்களே..!

உங்களது பொருளாதாரம் உயரும். பூர்வீக சொத்துப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக விலகும். உடல்  நலத்தில் அக்கறை தேவை. தொலைபேசி தகவல் நல்ல செய்தியாக இருக்கும்.

சிம்மராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். நினைத்த காரியம் விரைவில் நடந்தேறும். உடல்நலனில் அக்கறை தேவை. உங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் வெளியில் சொல்லாதீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

அடுத்தவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். உங்களது நண்பர்கள் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பக்குவமாகப் பேசி பலரது பாராட்டுக்களைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள். உத்தியோக நலன் கருதி ஓர் மாற்றம் செய்ய எண்ணம் மேலோங்கும்.

விருச்சக ராசி நேயர்களே..!

புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு வரும். வீடு கட்டும் பணிகளில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி மேற்கொள்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தொலைபேசி வழித் தகவல் நல்ல நிம்மதியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மிக அரிதாக கிடைக்கும். நேற்றைய பிரச்சனை குறித்து இன்று உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்து விடுவார்கள். எதிரிகள் உங்களை விட்டு மெல்ல மெல்ல விலகுவார்கள். வாழ்க்கை துணை வழியே உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்தி வீடு தேடி வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண தடை அகலும். நண்பர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

மீனராசி நேயர்களே...!

புண்ணிய காரியங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதியவரை நம்பி செய்த காரியத்தில் அதிருப்தி இருக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.