12 ராசியினரில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

செல்வம் மேன்மேலும் பெருக கூடிய நாள். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி உங்களுக்கு வந்து சேரும். சில கொள்கையோடு இன்ற செயல்படுவீர்கள். சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. 

ரிஷப ராசி நேயர்களே....!

அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


மிதுன ராசி நேயர்களே..!

கனவுகள் நனவாகும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். பணிகளில் சற்று தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் உங்களது குறை சொல்லாதீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

முன்னேற்றம் ஏற்படும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உங்கள் சேமிப்பை உயர்த்த பல வழிகளை நாடுவீர்கள். நீண்ட தூர பயணம் பற்றி பேசுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே..!

வெற்றி கிடைக்க ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் மெல்லமெல்ல உங்களை விட்டு விலகி இருப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே....!

மனகுழப்பம் அதிகரிக்கும். உங்களை பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களுடன் வந்து பேசுவார்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்க நேரிடலாம்.

துலாம் ராசி நேயர்களே..!

கந்தப் பெருமானை நினைத்து வழிபட வேண்டியது நல்லது. பிறருக்கு சில பொறுப்புகளை சொல்வதால் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...!

முக்கிய புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொடுப்பார்கள். தொழில் வளர்ச்சி குறித்து புதிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

முன்னேற்றம் நாளுக்கு  நாள் அதிகரிக்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். 

மகர ராசி நேயர்களே....!

மனக்கவலை மெல்ல மெல்ல குறையும்.திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி  வரலாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கூட்டு முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

மனக்கவலை நீங்கி விடும். துன்பங்கள் குறைந்து விடும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

முருகனை வழிபடுவது நல்லது. செல்வாக்கு அதிகரிக்கும். வாய்ப்புகள் உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டும். அயல்நாட்டு முயற்சிகள் சாதகமாக அமையும்.

மீனராசி நேயர்களே..!

வெற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.