12 ராசியினரில் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் யாருக்கு உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

குடும்ப சுமை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அமைதிக்காக ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. பயணங்களை தள்ளிவைப்பது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

வியாபாரப் போட்டிகள் மெல்லமெல்ல நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது.

கடகராசி நேயர்களே...!

கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். கலகலப்பாக இருப்பீர்கள். வீடு இடம் வாங்க முயற்சி செய்வீர்கள். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்மராசி நேயர்களே...!

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். எதிர்பார்த்த அளவுக்கு பணவரவு இருக்கும். நண்பர்களின் உதவியோடு அதிக முதலீடு செய்ய முன்வருவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். பாதியில் நின்ற வேளை விறுவிறுப்பாக இருக்கும். 

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் இருந்து வந்த பகை சற்று குறையும். புதிய தொழிலில் பங்குதாரர்களை சேர்க்க முயற்சி செய்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

அலைபேசி வழி தகவல் நல்லதாக அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். வளர்ச்சி பாதைக்கு செல்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

கும்ப ராசி நேயர்களே...!

நேற்றைய பிரச்சினை இன்று உங்களுக்கு நல்ல முடிவுக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதியாக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

தடைகள் அகலும். தன வரவு திருப்தியாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். போட்டிகளை சமாளிப்பீர்கள்.