12 ராசியினரில் " சிரித்து பேசுபவர்களை நம்ப கூடாத ராசியினர்" யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உங்களுடைய புதிய முயற்சிகளால் பல வெற்றி கிடைக்கப்பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். உங்களுடைய பேச்சுத் திறமையால் ஒரு சில காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

கனவுகள் நனவாகும் நாள். கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

வரவு ஒரு பக்கம் இருந்தாலும் செலவு சற்று அதிகரிக்கும் நாள். இதனால் வரை நண்பர்களுடன் சேர்ந்து செய்து வந்த தொழிலில் தற்போது தனியாக செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கடக ராசி நேயர்களே...!

உங்கள் அருமையான யோசனையை ஏற்று பலரும் பாராட்டு தெரிவித்து நன்மை அடைவார்கள். இல்லத்தரசிகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தொட்ட காரியம் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பல விஷயங்களை தூக்கி வீசுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். ரகசியங்களை மற்றவர்களிடம் சொல்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

சிரித்து பேசும் நண்பர்கள் உங்களுக்கு சிக்கலை உருவாக்குவார்கள். நெருக்கடிகள் அதிகரிக்கும். செலவுகள் வரிசையாக வந்து நிற்கும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது.

விருச்சிக ராசி நேயர்களே...!

வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். திருமண முயற்சி வெற்றி பெறும். மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

இது நாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். அரசியல்வாதிகள் உங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகி பணப்பற்றாக்குறை நீங்கும்.

மகர ராசி நேயர்களே...!

நம்பிக்கை அதிகரிக்கும். கல்யாண கனவுகள் கைகூடும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே..!

விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடத்த முக்கிய பேச்சு நடத்துவீர்கள்.

மீன ராசி நேயர்களே...!

தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நீண்ட நாளாய் இருந்துவந்த பிரச்சினை ஒன்று எளிதாக முடியும்.