12 ராசியினரில் யாருக்கு பண புழக்கம் அதிகரிக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களது சிந்தனை இன்று வெற்றி பெறும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சொந்தங்களால் சில சமயத்தில் பிரச்சினை ஏற்பட்டு மறையும். உறவினர் மத்தியில் மனஸ்தாபம் ஏற்படலாம். பயணம் மேற்கொள்ளும்போது கவனம் தேவை.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்து சந்திப்பார்கள். கனிவாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும்.; வெளிநாடு தொடர்பால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். கல்யாண கனவு பலிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

கடன் சுமை குறைய வாய்ப்பு ஏற்படும். நல்லவர்களின் தொடர்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். பிள்ளைகளால் வளர்ச்சி ஏற்படும். சொத்து தகராறு நீங்கும்.

கடகராசி நேயர்களே...!

இல்லம் தேடி நல்ல இனிய செய்தி வரும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் கிடைக்கும். இடம் வாங்க சிந்தனை மேலோங்கும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். 

சிம்ம ராசி நேயர்களே...!

வரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

நண்பர்கள் மூலம் உங்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். செலவு குறைய தொடங்கும். முயற்சி வெற்றி அடையும். தொல்லை தந்த எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வீடு இடம் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். உங்களது பிரச்சனை முடிவுக்கு வரும்.

விருச்சக ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி அதிகரிக்கும். சொத்து சேர்க்கை தொடர்பாக நல்ல முடிவு எடுப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

இடமாற்றத்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பால் மனநிம்மதி கிடைக்கும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகர ராசி நேயர்களே..!

மகிழ்ச்சியான செய்தி வந்தடையும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பல தேவைகள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக வந்து சேரும். புது முயற்சிகள் வெற்றியடையும்.

கும்ப ராசி நேயர்களே...!

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கை தரம் உயர கட்டிட பணி தொடரும். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வார்கள். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

 திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். உதவி வருவதற்கான அறிகுறிகள் ஏற்படும். இடம் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள்.