12 ராசியினரில் யாருக்கு செல்வாக்கு அதிகரிக்கும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களது பொருளாதாரம் உயரும். பக்கபலமாக இருப்பவர்கள் நாளுக்குநாள் அதிகரிப்பார்கள். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு அதிகம்.

ரிஷப ராசி நேயர்களே..!

அமைதியாக பல்வேறு விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பண தேவைகள் தேவையான அளவுக்கு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

பயணத்தால் பலன் கிடைக்கும். பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.தொழில் வளர்ச்சிக்கு விஐபிக்கள் உதவி செய்வார்கள்.

சிம்மராசி நேயர்களே...!

லாபம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் உங்களுக்கு அனுகூலம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும்.

கன்னி ராசி நேயர்களே..!

எடுத்த காரியத்தை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வருமான அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்.

துலாம் ராசி நேயர்களே..!

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். பிரச்சினைகள் முடிவிற்கு வரும். அலுவலக பணிகளில் ஏற்பட்ட சற்று குறையும்.

விருச்சிக ராசி நேயர்களே..!

கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனை செய்வது நல்லது. உங்களது நண்பர்களை சந்தித்து உதவி செய்வீர்கள். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

தனுசு ராசி நேயர்களே...!

உறவினர் வருகையால் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் ஏற்பட்டு மறைந்து விடும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி அடையும்.

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பீர்கள். உற்றார் உறவினர் கைகொடுத்து உதவ முன்வருவார்கள். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை சற்று குறையும். பிரச்சனைகளை சமாளிக்க சாமர்த்தியமாக பேசி முடிவெடுப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

அதிர்ஷ்டமான நாள் அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மீன ராசி நேயர்களே..!

ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.