12 ராசியில்.. வாயை கொஞ்சம் அடக்க வேண்டிய ராசியினர் இவர்கள் தான்...! 

மேஷ ராசி நேயர்களே...!

உங்கள் மீது வீண் பழி வந்தாலும், அதனை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். ஆன்மீக பயணம் சென்று வருவது நல்லது. கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

ரிசப ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த பணம் உங்கள்  கைக்கு வந்து சேரும்.  ஒரு முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
 
மிதுன ராசி நேயர்களே...!

பங்கு சந்தை மூலமாக ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் புது முயற்சியை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சில முக்கிய வேலைகள் விரைவாக நடந்து முடியும்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு. சொந்தபந்தங்கள் அடிக்கடி வீட்டிற்கு வருவார்கள். மின்சார சாதனங்களை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

சிம்மராசி நேயர்களே...!

வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தர்மசங்கடமான சூழல் வந்தால் அதனை எளிதாக சமாளித்து விடுவீர்கள். அக்கம்பக்கத்தினரிடம் குடும்ப விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுடைய மதிப்பு மரியாதை உயரும். மனதில் நல்ல தெளிவு ஏற்படும். திருமண முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வந்து சேரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். அதிகாரிகளின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

எந்த காரியத்தை தொடங்கினாலும் நல்லதாக முடியும். சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். வீடு மனை வாங்க முற்படுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

உங்கள் புத்திசாலித்தனத்தால் பல்வேறு காரியங்களை மிக எளிதாக செய்து காட்டுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.


மகர ராசி நேயர்களே...!

சாதுர்யமாக பேசி பல காரியங்களையும் மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மிக எளிதாகத் தீர்வு காண்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

பண பலம் அதிகரிக்கும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீடு மனை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். 

மீனராசி நேயர்களே...!

ஆன்மீகம் யோகாவில் அதிக ஈடுபாடு ஏற்படும். வேலை சுமை முன்கோபம் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. வாகனத்தில் செல்லும் போது அதிக வேகம் வேண்டாம்.