12 ராசியினரில் யாருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உள்ளது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பழகிய சிலருக்காக உங்களது பாக்கெட்டில் இருந்து பணத்தை செலவிட நேரிடும். வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல செய்தி உங்களுக்கு வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

சொல்வதை செய்து காட்டும் துணிவு உங்களுக்குள் பிறக்கும். தன்னம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி மகிழக் கூடியவர்கள். உயரதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே....!

நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாழ்வில் உங்களது மரியாதையும் மதிப்பும் உயரும். இல்லம் தேடி வரும் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கடகராசி நேயர்களே...!

மற்றவர்களை விமர்சனம் செய்வதன் மூலம் பிரச்சினைகள் வரலாம். எடுத்த காரியத்தை முடிக்க மிகவும் கடின படுவீர்கள். விலைமதிப்புள்ள பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

கல்யாண முயற்சி கைகூடும். எதிர்கால முன்னேற்றம் குறித்து நல்ல முயற்சி எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரலாம். கனவுகள் பலிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒரு விஷயம் நடக்கும். 

கன்னி ராசி நேயர்களே...!

ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறப்பான பலன் கிடைக்கும். புத்திசாலித்தனமாக  செயல்படுவீர்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள். கல்யாண கனவுகள் நனவாகும்

துலாம் ராசி நேயர்களே...! 

திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். நினைத்த காரிய நிறைவேறும் நாள். பொறுமையாக யோசனை செய்து நல்ல ஒரு முடிவை எடுப்பது  நல்லது 

விருச்சிக ராசி நேயர்களே...!

செல்வநிலை அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள்.

தனுசு ராசி நேயர்களே....!

சகோதர வகையில் உங்களுக்கு பலன் கிடைக்கும். வாழ்க்கைத் தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் உங்களுக்கு தொல்லை தரலாம்.

மகர ராசி நேயர்களே..! 

வருமானம் அதிகரிக்கும். உங்களது முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவார்கள். மனதிற்கு இனிய ஓர் சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது 

கும்ப ராசி நேயர்களே....! 

கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சு உங்கள் வீட்டில் அடிபடும். 
 
மீன ராசி நேயர்களே..! 

திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். செலவு அதிகரிக்கும். திடீர் மாற்றங்கள் ஏற்படும். வீடு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.