12 ராசியினரில் யாரெல்லாம் இன்று செம ஜாலியாக இருப்பீங்க தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகம் பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என தீவிரமாக செயல்படுவீர்கள். மனதுக்கு பிடித்த சில விஷயங்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

கடகராசி நேயர்களே..!

செய்வது ஒன்றாகவும் செய்ய நினைப்பது ஒன்றாகவும் அமையும். குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டை வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் அவ்வப்போது வந்து போகும். அமைதியாக இருப்பது நன்மை. திடீரென அலைச்சல் ஏற்படலாம்.

Read more : டெங்கு வந்தால் மிக ஈஸியா நீங்களே கண்டுப்பிடிக்கலாம்..! எப்படி தெரியுமா..?

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல்நிலையில் அக்கறை காண்பிக்க வேண்டும்.

துலாம் ராசி நேயர்களே..!

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்வதற்கு பண வரவு கிடைக்கும். குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முற்படுவீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே..!

திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் உங்களுக்கு அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துபோகும். எதிர்ப்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும். திடீரென பணவரவு அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...!

மனநிறைவுடன் சில காரியங்களைச் செய்வீர்கள். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் திடீரென உங்கள் வீட்டிற்கு வரலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை களுக்கு வேறு வழி என்ன என சிந்திப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும்.

மீனராசி நேயர்களே...!

பிரியமானவர்களின் சந்திப்பு  நடக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காண்பிப்பது நல்லது.