12 ராசியினரும் இதை படிங்க..! 

மேஷ ராசி நேயர்களே..!

பழைய கசப்பான சம்பவங்கள் உங்களை வாட்டி வதைக்கும். இதைப்பற்றி நீங்கள் யாரிடமும் வெளியில் விவாதிக்க வேண்டாம். உங்களுடைய அனுபவங்களால் சில நல்ல முடிவை எடுப்பீர்கள். திடீரென வாகன செலவை ஏற்படுத்தும்.

ரிஷப ராசி நேயர்களே..!

நண்பர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு விரைவில் நீங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தையை அனைவரும் கேட்பார்கள். வேற்றுமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். பழைய கடனை எப்படி தீர்ப்பது என முக்கிய திட்டமிடுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமூகமாக முடியும்.

கடக ராசி நேயர்களே...!

உங்களை விட்டு விலகியிருந்த சொந்தபந்தங்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள். குல தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

சில விஷயங்களில் குழப்பம் தொடர்ந்து இருக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வீடு வாங்குவது குறித்து நல்ல முடிவு எடுப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த அன்னோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் உங்களை வந்தடையும்.

துலாம் ராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். வீடு வாங்குவது குறித்து முயற்சி செய்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

முன்கோபம் அடிக்கடி வரும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்காலம் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல் செலவுகள் ஏற்படலாம். கடினமாக முயற்சி செய்து மட்டுமே ஒரு வேலையை முடிக்க முடியும்.

மகர ராசி நேயர்களே..!

புது வேலை உங்களுக்கு அமையும். அரசால் ஆதாயம் உண்டு. பங்கு வர்த்தகம் மூலம் நல்ல பலனை பெறலாம். அவரது செல்வாக்கு வெளி உலகில் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...! 

புது பொறுப்புகளுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். உங்களுக்கு சொத்து கிடைக்கும்.

மீனராசி நேயர்களே..!

முக்கிய முடிவுகளை உடனடியாக எடுக்கிறீர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.