12 ராசியில் பட்டைய கிளப்பும் ராசியினர் இவர்கள் தான்..! 

மேஷ ராசி நேயர்களே...!

எதிரிகளை சாதுர்த்தியமாக வீழ்த்தக்கூடிய திறமை பெற்றவர்கள் நீங்கள். தந்தைவழி உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

வீடு மனை வாங்க வாய்ப்பு உண்டாகும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

மிதுன ராசி நேயர்களே...!

பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை தேவை. வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கக் கூடும். இனிய செய்தி இன்று உங்களுக்கு வரலாம்.

கடக ராசி நேயர்களே..!

மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ வாய்ப்பு உண்டு. ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இது எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். சில விவாதங்களில் கலந்துகொண்டு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய நண்பரை சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

புதிய வாகனம், வீடு வாங்க உங்களுக்கு வாய்ப்பு உண்டு. சாதுர்யமாகப் பேசி பல காரியங்களையும் முடித்துக் கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மன பலமும் வலிமையும் உங்களுக்கு உண்டாகும். மின்சார சாதனங்களை வாங்கி மகிழக்கூடிய நாள் இது.

விருச்சக ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றி கொடுக்கும். குடும்பத்தில் உங்கள் பலம் அதிகரிக்கும். உங்களது ஆலோசனையை கேட்க காத்திருப்பார்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

வீடு கட்டுவது நல்ல விதத்தில் முடிவடையும். சில ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். புகழ்பெற்ற பல முக்கிய ஸ்தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. இன்று இனிய செய்தி உங்களை வந்தடையும்.

கும்ப ராசி நேயர்களே..!

திடீர் பயணங்கள் ஏற்படலாம். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் செலவுகள் வந்து போகும்.

மீனராசி நேயர்களே...!

அரசு உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உங்களுக்கு எளிதாக கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.