12 ராசியினரில் இன்று பட்டைய கிளப்பப்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...! 

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் செல்லவேண்டும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்திவிட்டு உங்களது வேலையை பாருங்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

குடும்பத்தினரிடம் உங்களது கோபத்தை காட்டாதீர்கள். யாருக்காகவும் முன்நின்று எதையும் செய்யாதீர்கள். வேண்டாத வேலைகள் உங்களுக்கு வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மிதுன ராசி நேயர்களே....!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

உங்களது சிந்தனை திறன் அதிகரிக்கும்  நாள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பல சிந்தனைகள் அவ்வப்போது வந்து போகும். கல்யாண பேச்சு வார்த்தை ஏற்படலாம். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தடைப்பட்ட வேலைகளை மிக எளிதாக முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டாகும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் அதிகரிக்கும். 

கன்னி ராசி நேயர்களே...!

உங்களுக்குள் அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை வந்து போகும். அடுத்தவரின் மனம் காயப்படும் படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்கவே பார்க்காதீர்கள் 

துலாம் ராசி நேயர்களே...!

உங்களுடைய நிர்வாகத் திறமை நாளுக்கு நாள் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உங்களுக்கு அறிமுகமாகி உதவி செய்வார்கள். 

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு ஏற்படும். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு மிக எளிதாக கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகரிக்கும்.வாகனச் செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களது பிள்ளைகளின் தனித்திறமையை கண்டறிந்து அதற்கேற்றவாறு நீங்கள் ஊக்கப்படுத்தாதீர்கள். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் ஏற்படும். புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.

மகர ராசி நேயர்களே...!

வீட்டின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய நாள் இது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலும் வரலாம்.

கும்ப ராசி நேயர்களே...!

திட்டவட்டமாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சொத்து பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்

மீனராசி நேயர்களே...!

புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண முயற்சி மேற்கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்க திட்டமிடுவீர்கள்.சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.