12 ராசியினரில் இன்று  ஜாலியாக இருக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

கணவன் மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி விடும். யாரையும் பகைத்துக் கொண்டு பேச வேண்டாம். சகோதரர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய நபர் நீங்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள்.சில வேலைகளை விரைவாக செய்து காட்டுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கக் கூடிய நபர் நீங்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்கள் செய்து முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் நீங்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைப் படுகிறீர்கள். யோகா தியானம் உள்ளிட்டவற்றில் மனதை செலுத்துவீர்கள். நல்ல செய்தி உங்களுக்கு இன்று வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். முக்கிய காரியங்களை முன்னெச்சரிக்கையாக செயல்படுத்துவது நல்லது. தாய்வழி உறவினர்கள் உங்களை மதிப்பார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பிரச்னைகளின் ஆணிவேரை பிடித்து தூக்கி எறிவீர்கள். உங்களது பிள்ளைகளின் புகழ் வெளிவட்டாரத்தில் அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களை வந்து சந்திப்பார்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உங்களை சுற்றி இருப்பவர்களை நன்கு அறிந்து கொள்ளும் நாள் இது. பழைய கடனை தீர்த்துக்கொள்ள புது முயற்சியில் இறங்குவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்ப்புகளை எல்லாம் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். 

மகர ராசி நேயர்களே..!

விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்கள் உங்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முன்கோபம் இல்லாமல் இருப்பது நல்லது. பண விஷயத்தில் நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த வேலை இன்று முடிவுக்கு வரும்