12 ராசியினரில் மஜாவா இருக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

எதையும் சமாளிக்கும் திறமை உள்ள நீங்கள் எப்போதும் மேன்மேலும் உயர்வீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டு அறிந்து அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு வரும். 

மிதுன ராசி நேயர்களே..!

குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். நன்றி மறந்த ஒருவரைக் கண்டு அவ்வப்போது மனம் கலக்கம் அடைவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய சரியான தருணம் உங்களுக்கு அமையும். உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது குறித்து சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மராசி நேயர்களே...! 

உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து திட்டமிடுவீர்கள். சிக்கனமாக செலவழித்து வாழ கற்றுக் கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.பிள்ளைகளால் உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய நட்பு வட்டாரம் அதிகரிக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை எதிர்பாராது சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை தீர்க்க வழி உங்களுக்கு கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

விருச்சக ராசி நேயர்களே...!

குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து சில பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படுவீர்கள். பிரபலங்களின் நட்பு உங்களுக்கு எளிதாக கிடைக்கும். உங்களின் பெருந்தன்மையை உறவினர்கள் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.

தனுசு ராசி நேயர்களே..!

சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி நேயர்களே...!

சில நேரங்களில் மன அமைதியற்ற நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தாருடன் அமைதியாக பேசுவது நல்லது மற்றும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது ஆக சிறந்தது.

கும்ப ராசி நேயர்களே...!

பண விஷயங்களில் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தேவையான வேலைகளை உடனுக்குடன் முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பயணங்கள் ஏற்படலாம்.

மீனராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் ஆதரவு உங்களுக்கு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். விலகி இருந்த உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள்.