Asianet News TamilAsianet News Tamil

12 ராசியினரில் புதிய சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் யாருக்கு உண்டு தெரியுமா..?

முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். காசு பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். சில மகிழ்ச்சையான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும் நாள்.

12 horoscope benefits as on 5th march 2020
Author
Chennai, First Published Mar 5, 2020, 1:27 PM IST

12 ராசியினரில் புதிய சொத்து வாங்கும் அதிர்ஷ்டம் யாருக்கு உண்டு தெரியுமா..?  

மேஷ ராசி நேயர்களே..!

நண்பர்கள் மூலம் உங்களுக்கு இன்று நல்ல தகவல் கிடைக்கும். பல நெருக்கடிகளை கடந்து புதிய சாதனை படைப்பீர்கள். உங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்வீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். காசு பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும். சில மகிழ்ச்சையான விஷயங்கள் நடக்கும். நீண்ட நாளைய ஆசை ஒன்று நிறைவேறும் நாள்.

12 horoscope benefits as on 5th march 2020

மிதுன ராசி நேயர்களே...!

உங்களுக்கு வரும் காலங்களில் மிக சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. பேச்சுத் திறமையால் மற்றவர்களிடமிருந்து மிக எளிதாக விடுபட்டு கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

இடமாற்றம் பற்றிய சிந்தனை அடிக்கடி வந்து செல்லும். உங்களது வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொலைபேசி வழித் தகவல் மனதிற்கு இனிமையான செய்தியைக் கொடுக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

தெய்வ நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். உங்களது சேமிப்பை உயர்த்த புதிய திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள்.இல்லத்தில் நல்ல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. புதிய பொருள் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

12 horoscope benefits as on 5th march 2020

கன்னி ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கக் கூடிய விஷயங்கள் நடக்கும். பிற இனத்தவரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்கக் கூடிய நிலை ஏற்படும்.

துலாம் ராசி நேயர்களே...!

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். இன்று பிரியமானவர்கள் உங்களிடம் பேசுவார்கள். உடலில் எந்த பிரச்சினை அகலும் .பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்க முயற்சி செய்வீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேலை ஒன்று முடியும். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. 

தனுசு ராசி நேயர்களே..!

மகிழ்ச்சி கூட மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மங்கள நிகழ்ச்சிகள் விரைவில் உங்கள் வீட்டில் நடக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முற்படுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். தடைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் உங்களிடம் வந்து பேசுவார்கள். திருமண பேச்சு எடுபடும்.

கும்பராசி நேயர்களே....!'

கனவு நனவாக கூடிய நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். கல்யாண பேச்சுவார்த்தை அடிபடும்.

ஊதி காட்டினா உசுரு போய்விடும்.. கொரோனாவால்... குடிமகனுக்கு ஒரே குஷி..!

மீனராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வாகன பராமரிப்புச் செலவு குறைய தொடங்கும் தாய் வழியில் ஏற்பட்ட தகராறு மெல்ல மெல்ல மாறி விடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம் 

Follow Us:
Download App:
  • android
  • ios