12 ராசியினரில் யோகம் பெற கூடிய ராசியினர் இவர்களே ..! 

மேஷ ராசி நேயர்களே..!

நினைத்த காரியம் நிறைவேறும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சில பிரச்சனைகளை மிக எளிதாக கண்டும் காணாமலும் எடுத்துக்கொள்வது நல்லது. சேமிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் குறைய வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே...!

அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள் இது. வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேக்கொள்ள வேண்டி வரலாம். 

கடக ராசி நேயர்களே...!

உங்களது அன்பு நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்களால் திடீர் பலன் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு உண்டு.

சிம்ம ராசி நேயர்களே...!

பல போட்டிகள் இருந்தாலும் முன்னேற்றம் அதிகரிக்கும். அரசியலில் ஈடுபாடு இருக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகை அகலும்.

கன்னி ராசி நேயர்களே....!

சுப செய்திகள் அவ்வப்போது வந்து செல்லும். சொன்ன சொல்லை காப்பாற்ற முற்படுவீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். வீண் அலைச்சல் உண்டாகலாம். 

துலாம் ராசி நேயர்களே...!

நம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்க கூடிய யோகம் பிறக்கும். மேலும் பொருளாதார நிலை உயரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வீர்கள். வருமானம் திருப்தியாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுக்கு பிடித்த பொன்னும் பொருளும் வந்து சேரும். வருமானம் திருப்தியாக இருக்கும். சில விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வரும்.

தனுசு ராசி நேயர்களே...!

போன் மூலம் பொன்னான செய்திகள் வரும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகரிக்கும். மன குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மகர ராசி நேயர்களே...!

நிதியுதவி தேவைப்படும். பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. உடல் நலத்தில் ஆரோக்கியம் தேவை. 

கும்ப ராசி நேயர்களே...!

விரோதிகள் உங்களை விட்டு விலகுவார்கள். வீடு வாகனம் வாங்க யோகம் உண்டாகும். தொழிலில் சில மாற்றங்கள் உருவாகலாம். அனுபவமிக்கவர்களிடம் கலந்து ஆலோசனை செய்வது நல்லது.

மீனராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை எதிர் பார்த்து இருப்பீர்கள்.