12 ராசியினரில் தூள் கிளப்பப்போகும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும் நாள். பக்குவமாக பேசி பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும்

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.. தூக்கத்தில் தேவையில்லாத கனவுகள் வந்து நச்சரிப்பு ஏற்படுத்தும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து பேசுவது மிகவும் நல்லது. வாகனங்கள் தொடர்பாக திடீரென செலவு உண்டாக வாய்ப்பு உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

காரியங்களில் கவனமாக இருப்பீர்கள். கல்யாண முயற்சி குறித்து முக்கிய பேச்சு வரும். வாழ்க்கையில் உயர வேறு என்ன செய்ய முடியும் என சிந்தனையில் இருப்பீர்கள்.  மனதில் புதிய தெம்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

 பல புதிய நல்ல செய்தி உங்கள் வீட்டைத் தேடி வரும். உற்றார் உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கும். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத ஓர் விஷயம் இன்று சாதகமாக முடியும்.

சிம்ம ராசி நேயர்களே..! 

செல்வாக்கு உயரும் நாள். செய்யும் தொழிலில் மேன்மை அதிகரிக்கும். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

விரயங்கள் அதிகரிக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிரிந்துசென்ற உறவினர்கள் மீண்டும் உங்களை நாடி வந்து பேசுவார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். கௌரவம் அந்தஸ்து நாளுக்கு நாள் அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். குடும்ப வருமானமும் கூடும்.

விருச்சக ராசி நேயர்களே...!

நன்மைகள் அதிகம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தியாக இருக்கும். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணங்கள் நல்ல பலனை கொடுக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

தாராளமாக செலவு செய்யும் நாள். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். மன உறுதியுடன் செயல்பட்டு சில காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களுக்கு பாராட்டும் புகழும் கூடும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து காட்டுவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

உத்தியோக மாற்றம் குறித்த சிந்தனை பிறக்கும். நண்பர்களால் தொல்லை அதிகரிக்கும்.  பெற்றோர் உடல்நலனில் அதிக அக்கறை தேவை.