12 ராசியினரில் யாருக்கு இன்று நல்ல நாளாக அமையும் தெரியுமா ..? 

மேஷ ராசி நேயர்களே...!

யாரிடத்திலும் மிகவும் அளவாக பேசுவது நல்லது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பலமுறை யோசித்து முடிவெடுப்பது உங்களுக்கு நல்லதாக அமையும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஒரு சில காரியங்கள் தாமதமாக முடிய வாய்ப்பு உண்டு. திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி காணப்படும்.

கடக ராசி நேயர்களே...!

எதிர்ப்பவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். உயர்பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

ஒரு சில பிரபலங்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த சின்ன சின்ன வாக்குவாதங்கள் பெரிய சண்டையாக மாற வாய்ப்பு இருக்கிறது. எனவே பார்த்து நிதானமாக பேசுவது நல்லது. மற்றவர்களை குறை சொல்லாதீர்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

துலாம் ராசி நேயர்களே...!

மனைவிவழி உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எந்த ஒரு காரியமாக இருந்தாலும் நிதானமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

பழைய பிரச்சினை, சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். பிரபலங்கள் உங்களுக்கு முன் வந்து உதவுவார்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சரி செய்ய வேண்டிய நேரமிது.

தனுசு ராசி நேயர்களே...!

இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். எதிர்பாராத பண வரவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

பெரிய பதவியில் இருப்பவர்கள் உங்களுடன் நட்பாக பழகுவார்கள். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வீடு வாங்குவது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

உங்கள் செயலில் வேகம் அதிகரிக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பிள்ளைகளின் வேலை தொடர்பாக முக்கிய பிரமுகரை சந்தித்து பேசுவீர்கள்.பண வரவு திருப்தியாக இருக்கும்.

மீனராசி நேயர்களே...!

சொத்து தகராறு ஓர் முடிவுக்கு வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். வீட்டை விரிவுப்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது.