12 ராசியினரில் இவர்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் மாற்றம் வருமாம்..! 

மேஷ ராசி நேயர்களே..!

பிள்ளைகள் உங்களது குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். சிக்கனமாக செலவழித்து, எப்படி சேமிக்க வேண்டும் என்பது குறித்து சிந்திப்பீர்கள். பூர்வீக சொத்து பற்றி சிந்தித்து இதுநாள் வரை இருந்து வந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

பல்வேறு தடைகளை மீறி தாங்கள் ஈடுபட்டுள்ள வேலையில் வெற்றி கிடைக்கும். புதிய புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். மிகப்பெரும் நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும். கடல் பற்றி அவ்வப்போது சிந்திப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சொத்து பிரச்சினையில் இருந்து வந்த தடைகள் நீங்கி அதற்கான ஓர் தீர்வு கிடைக்கும். விருந்தினர்கள் உங்களது வீட்டிற்கு வந்து மகிழ்ச்சி ஏற்படுத்துவார்கள். பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்வாக இருப்பீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தியானம் செய்வது நல்லது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

சிம்மராசி நேயர்களே...! 

தேவையான பணம் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் அதை விட செலவு அதிகரித்துச் செல்லும். நெருங்கியவர்கள் சிலர் உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதனை சாதாரணமாக சமாளித்து காட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...1

நிதானமாக பேசுவது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். சிக்கனமாக இருக்க பழகிக் கொண்டு சேமிக்கத் தொடங்குங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வெளிவட்டாரத்தில் உங்களது மரியாதை உயரும்.

துலாம் ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக ஒருசிலவற்றை விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே..!

உங்கள் செயல்பாட்டில் மாற்றம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களின் செயல்பாட்டில் மாற்றம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவி செய்வார்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து உங்களிடம் பேசுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே..!

கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். கேட்ட இடத்திலிருந்து உங்களுக்கு தேவையான உதவி தக்க சமயத்தில் வந்து சேரும்.

மகர ராசி நேயர்களே...!

உறவினர்கள் நண்பர்களிடம் அதிகமாக பேசி உங்களது பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். முன் கோபம் வேண்டாம். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

பல கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

மீனராசி நேயர்களே..!

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழல் நிலவும். வீட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி வரலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.