12 ராசியினருக்கும் இன்று நிலை இப்படிதான்..! 

மேஷ ராசி நேயர்களே ..! 

உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் அதிகரிப்பார்கள். பொதுவாழ்வில் ஈடுபட ஆர்வம் தோன்றும். கல்யாண கனவுகள் நிறைவேற வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி நேயர்களே..!

கூடப்பிறந்தவர்கள் உங்களுக்கு நன்மை செய்வார்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

உத்யோகத்தில் சில மாற்றங்கள் வரும். பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே...!

வேறு இடத்துக்கு மாறுவது குறித்த சிந்தனை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதில் ஆர்வம் காண்பிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்க முற்படுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

அலைபேசி வழியாக ஒரு நல்ல செய்தி உங்களைத் தேடிவரும். எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். எதிர்காலம் இனிமையாக அமைய அடித்தளம் கேட்டீர்கள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும். வருமானத்திற்கு என்ன வழி என யோசனை செய்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சில முடிவுகள் எடுப்பீர்கள்

துலாம் ராசி நேயர்களே...!

வரவை விட செலவு அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை குழப்பத்தை அகற்றும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வரவு தேவையான அளவுக்கு இருக்கும். தொலைபேசி வழித் தகவல் உங்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உருவாகும். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வருமானம் திருப்தியாக இருக்கும். 

மகர ராசி நேயர்களே...!

ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்றார் உறவினர்கள் உங்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை கொஞ்சம் கொஞ்சமாக மாறும்.

கும்பராசி நேயர்களே...!

அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். புதிய வழி உங்களுக்கு கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவார்கள். திடீரென  வெளியூர் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.