12 ராசியினரில்... இவங்களுக்கு மட்டும் அடித்தது அதிர்ஷ்டம்...! 

மேஷ ராசி நேயர்களே..!
 
கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். உடல் நலம் சீராக இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான பண வரவு கிடைக்கும்.

ரிஷப ராசி நேயர்களே..!

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து போகும். குடும்பத்தாரிடம் கோபம் கொள்ளாதீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய நிலைமை உருவாகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடக ராசி நேயர்களே..! 

பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தேடி வந்தவர்களை ஏமாற்றாமல் கண்டிப்பாக அவர்களுக்கு உதவி செய்ய முன் வருவீர்கள்.

சிம்மராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். விலகி இருந்த நண்பர்கள் உங்களை தேடி வருவார்கள். பல ஆன்மீக தளங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவை எடுக்கக்கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்க கற்று கொள்ளுங்கள். வாகனச் செலவு வைக்கலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக நடக்க நேரிடலாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்களின் திறமைகள் வெளிப்படும் நாள் இது. சவாலான காரியங்களை சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தாரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அறிமுகமாகி உதவி செய்வார்கள். அரசால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முற்படுவீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும்.

கும்பராசி நேயர்களே...!

பழைய சம்பவங்களை நினைத்து அவ்வப்போது மனதிற்குள் சிரித்துக் கொண்டிருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீடு வாகன பராமரிப்புச் செலவு அதிகரிக்க நேரிடலாம்.

மீனராசி நேயர்களே...!

அரசால் அனுகூலம் உண்டு. சொத்து பிரச்னையில் சுமுக தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து ஆலோசனை செய்ய முற்படுவீர்கள். பழைய நண்பரை சந்திக்க திட்டமிடுவீர்கள்.