12 ராசியினரில் யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு சில தொல்லைகள் உருவாக வாய்ப்பு உண்டு. தெரியாத நபர்களிடம் பார்த்து பேசுவது நல்லது. இது நாள் வரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

ரிஷப ராசி நேயர்களே...!

மதிப்பும் மரியாதையும் உயரும். இதுநாள் வரை இருந்துவந்த தடை நீங்கும். இனி எப்படியாவது பாடுபட்டு நினைத்த காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். புகழ் மிக்கவர்கள் உங்களுக்கு முன் வந்து உதவுவார்கள்.

ரிஷப மிதுன ராசி நேயர்களே...!

குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காக இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். உங்களது சேமிப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். சொத்துப் பிரச்சினைகளில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள்

கடக ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கும். விரோதங்கள் நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். சில முக்கிய திட்டம் தீட்டி அடுத்த கட்ட முயற்சியில் இறங்குவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

நினைத்தது நிறைவேறும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகரிக்கும். மறைமுகப் போட்டிகளை சமாளிக்கும் திறனும் உங்களுக்குள் பிறக்கும். குடும்ப சுமை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி நேயர்களே...!

குழப்பங்கள் அகல கூட இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். தேவைகளுக்காக நண்பர்களிடம் உதவி கேட்க நேரிடலாம். வீடு மற்றும் புதிய வாகனம் வாங்குவது குறித்து திட்டமிடுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

அதிகாரிகளாலும் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். சுப செலவுகள் ஏற்படும். எதிர்ப்புகளை மிக எளிதாக திட்டமிட்டு சாதித்துக் காட்டுவீர்கள். பணம் தாராளமாக வரும். எந்த காரியத்தையும் எடுத்தோம் முடித்தோம் என்று செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

பிரியமானவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செல்லுமிடமெல்லாம் உங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.

தனுசு ராசி நேயர்களே..!

மன அழுத்தம் குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் வந்து உதவி செய்வார்கள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...!

வரவு திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வியாபார விருத்தி அதிகரிக்கும். தொழில் சீராக நடைபெற வாய்ப்பு உண்டு.

கும்ப ராசி நேயர்களே...!

பணவசதி பெருகும் நாள். பதவி உங்களை தேடி வரும். முன்னேறுவதற்கு பல திட்டங்களை தீட்டுவீர்கள்.

மீனராசி நேயர்களே...!

வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும் நாள். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல் நலம் சீராக வைத்துக் கொள்ளலாம். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.  -