12 ராசியினரில் யாருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் கிடைக்கும் தெரியுமா..?  

மேஷ ராசி நேயர்களே...!

வீண் அலைச்சல் ஏற்படும் நாள். நீங்கள் எதை சொன்னாலும் மற்றவர்களுக்கு தவறாக புரிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். உடல் நலத்தில் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களின் இலக்கை நோக்கி பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வீரர்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர். சமுதாயத்தில் உங்கள் மரியாதை உயரும் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி நேயர்களே....!

வேற்றுமொழி மதத்தை சேர்ந்தவர்களால் திடீர் நன்மை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த அயல்நாட்டு பயணம் ஒன்று நடைபெற வாய்ப்பு உண்டு. திடீரென வெளியூர்  பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடக ராசி நேயர்களே....!

பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு காண்பீர்கள். தியானம் யோகா போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும். பழைய நண்பர் ஒருவரை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பழைய வீட்டை புதுப்பிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். பற்றாக்குறையை சமாளிக்க அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

விவாதங்களில் வெற்றி பெற்று நிம்மதியாக இருப்பீர்கள். மனதில் சில நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். செல்வாக்கு உயரும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள  வேண்டி வரலாம்

துலாம் ராசி நேயர்களே..!

மாறுபட்ட அணுகுமுறையால் உங்களுடைய தனிப்பட்ட வேலைகள் எளிதில் முடிந்து விடும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். கலை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மறைமுகமாக அவமானம் ஏற்பட வாய்ப்பு உண்டு. கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடனை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...! 

எப்போதும் வேலை வேலை என வேலைச்சுமையால் ஓடிக்கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் சங்கடங்கள் வந்து போகும்.

மகர ராசி நேயர்களே..! 

இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் அதிகரிக்கும்.இல்லம் தேடி உறவினர்கள் வரலாம். கலைப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்

கும்ப ராசி நேயர்களே...!

உறவினர் நண்பர்கள் மத்தியில் உங்களுடைய அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே..!

நினைத்த காரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். அரசியல் குடும்பத்தின் அடுத்தடுத்த சுப நிகழ்ச்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இன்று நம்பிக்கை கொடுக்கும் வகையில் முக்கிய கூட்டத்தில் ஈடுபடுவீர்கள்.