Asianet News TamilAsianet News Tamil

தேர்வுக்கு டைம் ஆயிடுச்சு..! அசுர வேகத்தில் குதிரையை இயக்கி மாஸ் காட்டிய மாணவி...! வீடியோ...!

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி தேர்வுக்கு செல்லும் போது நேரம் ஆகிவிட்டதால் தான் வளர்த்து வந்த குதிரையில் பயணம் செய்து சரியான நேரத்தில் தேர்வு அறையை அடைந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

10th standard girl student riding the horse towards exam hall  in kerala
Author
Chennai, First Published Apr 8, 2019, 5:26 PM IST

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவி தேர்வுக்கு செல்லும் போது நேரம் ஆகிவிட்டதால் தான் வளர்த்து வந்த குதிரையில் பயணம் செய்து சரியான நேரத்தில் தேர்வு அறையை அடைந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் அருகே பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவி ஒருவர் தான் இவ்வாறு குதிரையில் தேர்வு எழுத சென்றுள்ளார். நன்கு பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே இந்த அளவிற்கு பொதுவெளியில் குதிரையை ஓட்டி செல்ல முடியும் என்பதை யாராலும் மறக்க முடியாது.

10th standard girl student riding the horse towards exam hall  in kerala

அதே வேளையில் சிறு மாணவி இந்த அளவிற்கு குதிரையை இயக்க கற்று தேர்ந்து உள்ளாரா என நினைக்கும்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. சாலை மார்க்கமாக குதிரையில் யூனிபார்மோடு  முதுகில் புத்தக பையை வைத்துக் கொண்டு வேகமாக பறந்துள்ளார் சிறுமி.

படத்தில் கூட ஹீரோவை குதிரையில் வருவது போல அனிமேஷன் செய்கின்றனர். ஆனால் ஒரு பள்ளி மாணவி நிஜத்திலேயே ஹீரோயிசமாக குதிரையை ஓட்டி சென்ற இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் பலரும் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சபாஸ் போட்டு வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யார் இந்த சிறுமி என்ற தேடலும் சமூக வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios