6 மாவட்டங்களில்..."100 டிகிரி"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம்.. மற்றொரு பக்கம் கோடைகாலம். சமாளிக்க முடியாமல் திணறும் ஒரு காட்சி.இப்படியாக செல்கிறது ஓவொரு நாளின் நேரம்.

இதில் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால், கோடை காலத்தில் கொரோனா தாக்கம் வந்துவிட்டது. ஊரடங்கு உத்தரவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து இருக்கிறது. மக்கள் வீட்டில் இருப்பதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று தப்பித்துக்கொள்கின்றனர்.

இருந்தாலும் கோடை வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகமாக தான் உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலே அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது  

இது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.மேலும் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வரும் தருணத்தில் கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருத்தணி, திருவள்ளூர்ஆகிய இடங்களில் 100  டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.மேலும் வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.