கொரோனாவிற்கு சரியான மருந்து கண்டுபிடிக்க எத்தனை நாள் ஆகும் தெரியுமா..? 

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரசுக்கு எப்போது தான் தடுப்பு மருந்தும், சிகிச்சை அளிப்பதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில்  நிலவுகிறது
 
கொரோனாவிற்கு உலகம் முழுவதும் இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பொதுவாக புதிய மருந்து கண்டுபிடிக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அவகாசம் தேவைப்படும். தொடர்ச்சியான பரிசோதனைகள் செய்து அதில் வெற்றி பெற வேண்டும்

இதற்காக உலக சுகாதார நிறுவனம் நான்கு மருந்துகளை பரிசோதிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி, எபோலா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் remdesivir கூட்டு மருந்து, மலேரியா சிகிச்சைக்கான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் எச்.ஐ.வி பாதித்தவர்களுக்கான lopinavir மற்றும் ritonavir மருந்து ... என இதனை மட்டும் ஆராய்ச்சி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டு உள்ளது 

வழக்கமாக புதிய மருந்துகள் உருவாக்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை அவகாசம் தேவைப்படும். குறிப்பாக தொற்று நோய்க்கான தடுப்பு மருந்து பரிசோதனைகளில் 5இல் ஒரு விழுக்காடு மட்டுமே வெற்றிகரமாக அமையும். எனவே இப்போதைக்கு ஒரு சில மருந்துகளை பரிந்துரை செய்ய முடியுமே தவிர, தடுப்பு மருந்து இதுதான் என மருந்து கண்டுபிடிபட்டது சில காலங்கள் ஆகும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்