இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா  இருப்பதை உறுதி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர் .

கடந்த 20ஆம் தேதி இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலா பயணிகளை சோதனை செய்ததில்   குறிப்பிட்ட நபர்களுக்கு கொரோன தாக்கம் இருந்துள்ளது. இந்த ஒரு நிலையில் அவர்களை கடந்த 4 ஆம் தேதி மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இவர்களில் அனைவருமே 60 வயதிற்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் உடலில் முன்னேற்றம் காணப்பட்டது. பின்னர் இன்று 10 இத்தாலியர்களையும் மேதாந்தா மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது, ஆரம்பத்தில் கொரோனா என்ற உடன் நாங்கள் அனைவரும் மிகவும் பயந்து இருந்தோம். பின்னர் டாக்டர் சுசிலா கதாரியா அவர்கள் குழு எங்களானுக்கு தொடர்ந்து சிகிச்சை அழைத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மற்ற  இருவர்  மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றபடி எங்கள் அனைவர்க்கும் குணமாகி விட்டது என  மகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க  மிக வேகமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு  பரவி வரும் நிலையில் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் விஷயமாக இவர்கள் குணமாகி உள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது. ஒரு பக்கம் இருக்க இத்தாலியில் கொரோனாவை கட்டுப்படுத்தமுடியாமல் திணறி வரும் தருணத்தில்  இந்தியாவில் சிகிச்சை பெற்ற இத்தாலியர்கள் குணமாகி இருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.