அடவாங்க..என்ன சாப்பிடுறீங்க... ஹோட்டலில் கலக்கும் மேட் இன் இந்தியா ரோபோக்கள்.
உபஹரா தர்ஷினி என்ற ரோபோ ரெஸ்ட்ராண்ட் திறக்கப்பட்டது. தற்போது ஒடிசாவின் புவனேஸ்வரில் ஒரு ரோபோ ரெஸ்ட்ராண்ட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் 2 ரோபோக்களும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மேலும் எந்த மொழியிலும் அந்த ரோபோக்கள் பேசும் என்பது அதன் சிறப்பு.
ஒடிசாவில் புவனேஸ்வரில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களை வரவேற்று உணவு பரிமாறும் மேட் இன் இந்தியா ரோபோக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.உணவகங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை வழங்குவதில் அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றன.
அதேசமயம் சில வித்தியாசமான முயற்சிகளால் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்த்து வருகின்றன சில உணவகங்கள். வெளிநாடுகளில் உணவகங்களில் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் தற்போது மனிதர்களின் வேலைகளை ரோபோக்கள் கைப்பற்ற தொடங்கி விட்டன. இந்தியாவில் முதல் முதலாக சென்னை போரூரில்தான் ரோபோ உணவகம் திறக்கப்பட்டது. கடந்த மே மாதம் கர்நாடகா மாநிலம் வினோபா நகரில் உபஹரா தர்ஷினி என்ற ரோபோ ரெஸ்ட்ராண்ட் திறக்கப்பட்டது. தற்போது ஒடிசாவின் புவனேஸ்வரில் ஒரு ரோபோ ரெஸ்ட்ராண்ட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் 2 ரோபோக்களும் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது மேலும் எந்த மொழியிலும் அந்த ரோபோக்கள் பேசும் என்பது அதன் சிறப்பு.
இது குறித்து ரோபோ செப் ரெஸ்ட்ராண்ட் உணவகத்தின் உரிமையாளர் ஜீத் பாசா கூறுகையில், இந்த ரோபோக்களுக்கு சம்பா மற்றும் சமேலி என்று பெயரிட்டுள்ளோம். இவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. கிழக்கு இந்தியாவில் எங்களது உணவகம்தான் முதல் ரோபோ ரெஸ்ட்ராண்ட். இந்த ரோபோக்கள் ராடார் அடிப்படையில் இயங்குபவை. உத்தரவு அடிப்படையில் அவை செயல்படும். ஒடியா உள்பட எந்த மொழியிலும் அவை பேசும். உணவகத்துக்கு வாடிக்கையாளர்களை வணக்கம் கூறி வரவேற்க அந்த ரோபோக்களில் வாய்ஸ் ஆப்ரேட் சிஸ்டம் உள்ளது என தெரிவித்தார். உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோபோக்களின் சிறப்பான சேவையை வியந்து பாராட்டி வருகின்றனர்.