Asianet News TamilAsianet News Tamil

ஆணுக்கு நிகர் இல்ல, அதை விட ஒரு படி மேல... தொழில் துறையில் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த சிங்கப் பெண்கள்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று தன்னை பெண்ணாக பாவித்து பெண் விடுதலைக்கு பாடினார் பாரதி.. அதற்கேற்ப எட்டுத்திக்கும் பரவி எல்லா துறைகளிலும் ஆணுக்கு நிகராக கோலோச்சும் சக்தியாக இன்று பெண்கள் உருவெடுத்து நிற்கின்றனர்.
 

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.
Author
Delhi, First Published Aug 6, 2022, 11:20 AM IST

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று தன்னை பெண்ணாக பாவித்து பெண் விடுதலைக்கு பாடினார் பாரதி.. அதற்கேற்ப எட்டுத்திக்கும் பரவி எல்லா துறைகளிலும் ஆணுக்கு நிகராக கோலோச்சும் சக்தியாக இன்று பெண்கள் உருவெடுத்து நிற்கின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களையும், எதிர்ப்புகளையும்  அடித்து நொறுக்கி அடுத்தடுத்த படிகளுக்கு அடி எடுத்து வைக்கும் எல்லா பெண்களுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான், அதற்கு உதாரணமாக  விடாமுயற்சியுடன் பெண்கள் முன் நின்று நடத்திகாட்டிய சாதனைகள் அவர்கள்  தொட்ட சிகரங்கள் பல உண்டு. பல நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆண்களே செய்யத் துணியாத பல துறைகளில் சாதித்து மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் சில பெண்களில் வெற்றிப் கதையை பதிவுசெய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

இந்தியாவில் வயது பேதமின்றி, சமூக பாகுபாடுயின்றி பல தொழில் முனைவோர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எல்லாத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிற பெண்கள் தாங்கள் கையில் எடுத்த துறைகளில் அவர்கள் வெற்றி பெறும்போது பலரை அது ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி பலருக்கு ஊன்றுகோலாக அமைகிறது. 

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.

போபர்ஸ் இந்தியா ஆய்வறிக்கையின் படி நாட்டிலுள்ள 20 சதவீதத்திற்கு அதிகமான சிறு குறு தொழிற்கூடங்கள் இந்தியாவிலுள்ள பெண் தொழில்முனைவோருக்கு சொந்தமானதாக உள்ளது. இது ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கையில் 23.3 சதவீதம் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 50 சதவீத பெண்கள் ஏதோ சூழலில் தொழில் முனைவோராக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில் ஆர்வாம் காட்டுகின்றனர் என்றும் அப்புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன் விளையாக நாட்டில் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது...

இந்த சர்வதேச மகளிர் தினத்தில் நம் இந்தியாவின் தலைசிறந்த 4 பெண் தொழில் முனைவோரை எசியா நெட் உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. பல தடைகளைத் தாண்டி இந்தியாவில்  தொழில்முனைவோராக தடம்பதித்த ஏழு பெண் தொழில் முனைவோரின்  வெற்றிக் கதையை விரிவாக பார்ப்போம்:- 

1.ஹேமலதா அண்ணாமலை-  (ஆம்பியர் எலக்ட்ரிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி)

எலான் மஸ்க்கின் மின்சார வாகன புரட்சியை உலகம் காண்பதற்கு முன்பே இந்தியாவைச் சேர்ந்த ஒரு லட்சிய வேட்கை கொண்ட மென்பொறியாளர் தனக்கென ஒரு சிறிய புரட்சி பாதையை தொடங்கினார். சிங்கப்பூரில் யூனி கனெக்ட் என்ற மனிதவள ஆலோசனை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த ஹேமலதா அண்ணாமலைதான் அவர். இந்தியாவில் மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முனைப்பில் 2008ஆம் ஆண்டு ஆம்பியர் எலக்ட்ரிக் நிறுவனத்தை தொடங்குவதற்காக கணவர் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தார்.

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.

2007 ஆம் ஆண்டு  தனது கணவருடன் சேர்ந்து ஜப்பானில் நடந்த ஒரு அறிவியல் மற்றும் தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொண்ட போது, அதில் பேசிய ஒரு சிறப்பு விருந்தினர் மின்சார வாகனம் என்பதே எதிர்கால போக்குவரத்திற்கு இன்றியமையாததாக இருக்கும் என கூறினார், அந்த பேச்சுதான் எதையாவது சாதிக்க வேண்டும் என்று காத்திருந்த ஹேமலதாவின் எண்ணத்தில், மின்சார வாகனம் உற்பத்தி என்ற விதையாக விழுந்தது. பின்னர் அது தொடர்பான R&D ஆராய்ச்சிக்குப் பின்னர் புதிதாக முதல் மின்சார ஸ்கூட்டரை உருவாக்குவதில் வெற்றி கண்டார் ஹேமலதா. தனது கண்டுபிடிப்பை பெருநகரங்களுக்கு கொண்டு செல்வதை விட கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்தார் ஹேமலதா

வின் இந்த முயற்சிக்கு அப்போது ரத்தன் டாடாவை தவிர வேறு ஆதரவு தெரிவிக்கவில்லை, எவரிடமிருந்தும்  உதவி கிடைக்கவில்லை, எப்படியாவது தனது நிறுவனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என முடிவு செய்த ஹேமலதா இன்போசிஸ் இணை நிறுவனர் உடன் இணைந்து கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நிறுவனத்தில் பங்குதாரராகவும் தனது நிறுவனத்தை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் இவரது நிறுவனம் தற்போது வரை 20 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது ஆண்டுக்கு 30 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு தனது தொழிலை விரிவு படுத்தியுள்ளார் ஹேமலதா.

 

2. ஃபல்குனி நாயர்,  (NYKAA நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர்)

பெரும்பாலும் பெண்கள்  குழந்தை பிறந்தவுடன்  வேலையை உதறி விடுகின்றனர், குழந்தைகள் வளர்ந்த பின்னர் ஒரு வேலை  தேடிக் கொள்ளலாம் என்ற மனநிலையே பெண்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது, ஆனால் பல்குனி நாயர் முற்றிலும் அதில் இருந்து மாறுபட்டவர், தனது வேலையை கைவிட்ட பின்னர் வேலைதேடி எந்த நிறுவனத்தையும் நாடவில்லை, கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றியவர் தனது 49வது வயதில் Nykaa என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.

ஏற்கனவே பிசினஸ் துறையில் பழம் தின்று கொட்டை போட்ட அவரது தந்தை பல்குனியாவுக்கு ஆக்கமும் ஊக்கமுமாக இருந்தார், சிறுவயது முதலே வணிகச் சூழலில் வளர்ந்த பல்குனியா அதில் உள்ள நுணுக்கங்களை ஓரளவிற்கு கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். அது அவரது தொழிலுக்கு பேருதவியாக இருந்தது. கோடக் மகேந்திரா குழுமத்துடன் தனது வணிகத்தை பிணைத்துக் கொண்ட அவர் 2012இல் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் இ காமர்ஸ் தளத்தை உருவாக்கினார்.

அதில் அவர் நினைத்ததை போன்றே சாதித்து காட்டினார். பெரும்பாலும் பெண்களை  மையமாக வைத்து முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் நிறுவனமாக தனது நிறுவனத்தை கட்டியெழுப்பிய நாயக் அதை வெறும் e-commerce நிறுவனமாக மட்டுமின்றி 38 நகரங்களில் 80 ஸ்டோர்கள் என கிளைப் பரப்பி அவற்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான பிராண்டுகளை அறிமுகம் செய்து மற்றொரு சாதனையை Nykaa  நிறுவனம் செய்துகாட்டியுள்ளது. 

Nykaa இன் IPO கிட்டத்தட்ட 82.5 மடங்கு  ஆகும். அதன் சந்தை மதிப்பை 1.05  லட்சம் கோடி ஆகும், இந்த மாபெரும் வெற்றி தன்னால் மட்டும் கிடைத்துவிடவில்லை, தனது கணவர், குழந்தைகள் என எல்லோராலும் கிடைத்த வெற்றி என தன்னடக்கத்துடன் கூறுகிறார் பல்குனியா நாயர். 

 

3. அதிதி குப்தா (மென்ஸ்ட்ரூ பீடியா காமிக்  வலைத்தளத்தின் நிறுவனர்)

இவரும் இவரது கணவர் துகின் பாலும் சேர்ந்து  இந்த காமிக்ஸ் இணையத்தை உருவாக்கியுள்ளனர். சமூகத்தில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அதிதி குப்தா களமிறங்கினார் அதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாதவிடாய் குறித்து எளிதில் அறிந்து கொள்வதற்கும் அது தீட்டு அல்ல அதன் பின்னால் அறிவியல் இருக்கிறது என்பதை விளக்குவதற்காகவும் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் என்ற வரைகதை நிறுவனத்தை நிறுவினார்.

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.

ஜார்கண்ட் மாநிலத்தின் கர்வாவில் பிறந்த  அதிதி குப்தா-விற்கு 12 வயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிட்டது, ஆனால் அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால் தனது 15 வயதில் ஒன்பதாம் வகுப்பில் மாதவிடாய் பற்றி கற்பிக்கப்பட்ட போதுதான் அதுகுறித்த அவருக்கு தெரியவந்தது. அதுமட்டுமின்றி தனது குழந்தை பருவத்தில் மாதவிடாய் நாட்களில் குடும்பத்திலுள்ளவர்கள் தன்னை தீட்டு என்றும், படுக்கைகளில் உட்காரக்கூடாது, வழிபாட்டு தலங்களுக்கு செல்லக்கூடாது, பூஜை அறைக்குள் வரக்கூடாது என ஒதுக்கியுள்ளனர்.

தனது  ஆடைகளை மற்றவர்களின் ஆடையிலிருந்து தள்ளிப்போய்  உலர்த்த வேண்டும் என்பது போன்ற பாகுபாடுகள் கட்டப்பட்டதாகவும் அதனால் காயமடைந்த அதிதி குப்தா மாதவிடாய் என்பது தீட்டு அல்ல அதன் பின்னால் அறிவியல் இருக்கிறது என்பது குறித்த சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தார்.  அப்போது காமிக்ஸ் வடிவில் இதை சொல்வதன் மூலம் எளிதில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பினார், அதன் விளைவாக தனது கணவருடன் சேர்ந்து காமிக்ஸ் வடிவில் மாதவிடாய் தொடர்பான கதைகள், படங்கள் அடங்கிய ஒரு வரைகலை புத்தகத்தை தொடங்க முடிவு செய்தார். இதற்காக ஒரு வருடம் பல மருத்துவர்கள், சிறுமிகளின் மாதவிடாய் அனுபவங்களை தொகுத்து புனைக் கதை புத்தகத்தை வடித்தார்.

பின்னர் அதை வலைதளங்களிலும் வெளியிட்டார், இதை அடிப்படையாக வைத்து நவம்பர் 2012 இல் அதிதி குப்தாவும் அவரது கணவரும் இணைந்து மென்ஸ்ட்ரூபீடியா என்ற வரைகதை நிறுவனத்தை தொடங்கினர், இந்தத்தளம் டீன் ஏஜ் இளைஞர்களுக்கு பருவமடைதல் மற்றும் பாலியல் குறித்த தகவல்களை வழங்கும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவரின் காமிக்ஸ் புத்தகம் 18 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 5 மாநிலங்களில் பட புத்தமாக உள்ளது. 

ஆரம்பத்தில் அதிதியின் இந்த முயற்சி கடுமையாக விமர்சிக்கப்பட்டது, ஆனால் இது இணையதளத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் புத்தமதம் மாறியதைத் தெடர்ந்து அவர் வெற்றியாளராக மாறியுள்ளார். மென்ஸ்ட்ரூபீடியா காமிக்ஸ் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் வாசகர்களை கொண்ட புத்தகமாக மாறியுள்ளது. இவரின் இந்த முயற்சிக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது, கடந்த 2014ஆம் ஆண்டில் போபர்ஸ் இந்தியா என்ற இதழின் 30 வயதுக்குட்பட்ட சிறந்த 30 பேர் பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றது. சமீபத்தில் இவரது நிறுவனத்திற்கு தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் 50 லட்ச ரூபாய் நிதி உதவி கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது. 

 

4.கிரண் மஜும்தார் ஷா - பயோகான் இந்தியாவின் நிறுவனர்

ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் ஒரு பெண் தொழில் முனைவோராக களமிறங்கி அதில்வெற்றி பெறுவது என்பது அவ்வளவு சாமானியமான காரியமல்ல,  ஆனால் தான் எடுத்த லட்சியத்தில் உறுதியாக நின்று அதில் வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோரில் தவிர்க்க முடியாதவராக உள்ளார் கிரண் மஜூம்தார் ஷா. இவர் பயோகான் இந்தியாவின் நிறுவனர் ஆவார். பயோகான் ஆரம்பத்தில் நொதித்தல் துறையிலும் பின்னர் மருத்துவ ஆராய்ச்சியில் பல சாதனைகளைப் படைத்த முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.

There is no equal to men, one step above it... lion women who have made a mark in the industry.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் கிரண் மஜூம்தார், பள்ளிக் கல்வியை பெங்களூரில் பயின்றார், மவுண்ட் கார்மல் கல்லூரியில் உயிரியல் மற்றும் விலங்கியல் படித்த இவர்,மருத்துவராக வேண்டும் என கனவு கண்டார், குடும்ப சூழலால் அந்த கனவை அவர் எட்ட முடியவில்லை. ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிற்குள் அவரை உந்திக் கொண்டே இருந்தது. அவரின் தந்தையின் ஊக்கத்தின் பேரில் மஜூம்தார் ஷா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் மார்டிங் மற்றும் புரூரிங்  பயின்றார், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவர், துவக்கத்தில் ஆஸ்திரேலியா நிறுவனமொன்றில் மதுபானம் தயாரிப்பவராக பணிக்கு சேர்ந்தார்.

பின்னர் கொல்கத்தா வந்த அவர் அங்கு ஜுபிட்டர் புரூவரீஸ் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றினார், ஒரு கட்டத்தில் நொதிகளை உருவாக்கும் தொழிலில் இறங்கினார், அதாவது பீர் அல்லது என்சைம்களை புளிக்க வைத்தல் என இருண்டுக்குமே அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றுதான் என்பதை நன்கு அறிந்திருந்த அவர் பெங்களூரில் தனது வாடகை வீட்டில் பயோகான் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை, மன உறுதியுடன் செயல்பட்டு கனரா வங்கியில் சிறிய அளவில் கடன் பெற்று ஒரு சிறிய அளவில் பணியார்களை நியமித்து உயிர் நொதிகளை உருவாக்கத் தொடங்கினார். 
அதில் குறிப்பிடப்படும் அளவுக்கு வளர்ச்சியை கண்டார் மஜூம்தார் ஷா. ஆஸ்திரேலியாவின் பணியாற்றிய போது நொதித்தல்  துறை குறித்து அனைத்து நுணுக்கங்களையும் துல்லியமாக அறிந்திருந்தது அவரது வெற்றிக்கு உதவியது.

அதைத்தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு ஸ்டேடிகன், இன்சுலின், மோனோ க்ளோனல், அன்டிபாடிகள் போன்ற  மருந்து தயாரிக்கும் துறையில் தனது பயோகாட் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். அதாவது அதுவரை  நொதிகளை உற்பத்தி செய்து வந்த அவரது பயோகான் நிறுவனம் நீரிழிவுநோய் புற்றுநோய்கள் மற்றும் தன்னியக்க நோய் எதிர்ப்பு நோய்கள் ஆகியவற்றைக் குறித்த ஆராய்ச்சி மையமாக மாறியது. ஒருங்கிணைந்த உயிரி மருந்து நிறுவனமாக தனது நிறுவனத்தை மாற்றினார், அதில் அபரிதமான வெற்றியும் கண்டார், இந்தியாவில் 33 மடங்கு அதிக சந்தா செலுத்திய ஐபிஓ வை வெளியிட்ட முதல் பயோடெக் நிறுவனமாக பயோகான்  உருவெடுத்தது இது முதல் நாள் $1.1 பில்லியன் சந்தை மதிப்புடன் நிறைவடைந்தது.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே ஒரு மில்லியனை தாண்டிய இந்தியாவின் இரண்டாவது நிறுவனமாக பயோகான் சாதனை படைத்தது. எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இருந்த கிரண் மஜூம்தார் ஷா, பெண்கள் எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்து காட்டிய சாதனைப் பெண்மணியாக வளம் வருகிறார். பெண்களுக்கு முன்னோடியாக திகழ்கிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios