கொரோனோவுக்கு வரவேற்பு கொடுத்த  மதுரை அரசு மருத்துவமனை..!! 
சர்ச்சையில் சிக்கிய மருத்துவர்கள்...!!

மதுரையில் கொரோனா வைரஸ்க்கு சிறப்பு வார்டு அமைக்கும் பணியை மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.அந்த வார்டு திறப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி, இனிப்பு வழங்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக கிளம்பியுள்ளது.

உகமே "கொரோனா" வைரஸ் என்கிற வார்த்தையை கேட்டாலே பீதியடைந்து வருகிறார்கள்.  சீனா வில் உள்ள வுகானா பகுதி முழுவதும் சுகாதார கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள். இந்தியா,பிரான்ஸ்,அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டுமக்களை அங்கிருந்து அழைத்து வந்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் அச்சத்துடனும்,கவலையிலும் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் மருத்துவ அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், சுகாதாரத்துறை ஒவ்வொரு மாட்டத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனோ வைரஸ் சிறப்பு வார்டை குத்துவிளக்கு ஏற்றியும், இனிப்பு வழங்கியும் திறந்து வைத்திருக்கிறார்கள். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகமே அரண்டு இருண்டு போய் இருக்கும் நேரத்தில் மதுரையில் மருத்துவர்கள் கொரோனாவை இனிப்பு கொடுத்து வரவேற்றிருப்பது ஓவராக இருக்கிறது. இதுபோன்ற அரசு டாக்டர்களின் செயல்பாட்டை தமிழக சுகாதாரத்துறை வேடிக்கை பார்க்க கூடாது. எங்கு சீரழிவு ஏற்பட்டலும் மனித நேயம் கரம் நீட்டுவது தமிழகம் தான் முதல் மாநிலமாக இருக்கும் அப்படிப்பட்ட மாநிலத்தில் இப்படி அரசு டாக்டர்கள் மனித நேயம் இல்லாமல் நடந்திருப்பதை கண்டித்திருக்கிறார்கள் பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும்...

T.Balamurukan