உடல் வலியை போக்க பல சிறப்பு ஸ்பா செயல்பட்டு வருவது நமக்கு தெரிந்த ஒன்றே... அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் இந்த ஒரு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் ஒரு புதுமை என்னவென்றால் சாப்பிட்டுக்கொண்டே பெடிக்கியூர் சிகிச்சை பெறும் வகையில் மீன்களை விட்டு காலில் இருந்து அழுக்கை நீக்க வைக்கின்றனர்.
உடல் வலியை போக்க பல சிறப்பு ஸ்பா செயல்பட்டு வருவது நமக்கு தெரிந்த ஒன்றே... அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் இந்த ஒரு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. இதில் ஒரு புதுமை என்னவென்றால் சாப்பிட்டுக்கொண்டே பெடிக்கியூர் சிகிச்சை பெறும் வகையில் மீன்களை விட்டு காலில் இருந்து அழுக்கை நீக்க வைக்கின்றனர்.
இந்தோனேஷியாவில் உள்ள இமாம் என்பவர், மீன்களை வைத்து பெடிக்யூர் முறையை அமல் படுத்தி உள்ளார். அவர் நடத்திவரும் ஓர் உணவு விடுதியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்கள் நீரில்நீந்த விடுகிறார். அதில் டேபிள் போட்டு மக்கள் அமர்ந்து உணவை உண்ணும் வகையில் ஏற்பாடும் செய்து உள்ளார். அதாவது நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் தருணத்தில் நம் காலில் உள்ள இறந்த செல்களை, அந்த நீரில் இருக்கக்கூடிய மீன்கள் அகற்றிவிடும். இந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கும் போது, "ஆரம்பத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இது தற்போது சுற்றுலா பயணிகள் அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இதற்கு முன்னதாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஒரு முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், இதன் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்படும் என்றும் மேலும் விலங்குகளுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என பீட்டா அமைப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட தமிழகத்தில் இந்த முறை முறையாக பயன்பாட்டிற்கு வரவில்லை என்றாலும், கோவிலுக்கு செல்லும்போதும் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றங்கரையில் இருக்கும் போதும் நம் காலை தண்ணீரில் வைக்கும்போது மீன்கள் வந்து பாதங்களை கடிப்பது உணரமுடியும். அவ்வாறு செய்தால் காலில் உள்ள அழுக்கை மீன்கள் எடுத்து விடும் என நம் முன்னோர்கள் சொல்லி இருப்பதையும் கேட்டிருப்போம். இதனைத்தான் அவர்கள் வியாபாரமாகவே செய்து வருகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 23, 2019, 4:10 PM IST