Asianet News TamilAsianet News Tamil

வாட்சன் vs ரஷீத்.. வம்பு இழுக்குறதா நெனச்சு வசமா வாங்கிக்கட்டிய ரஷீத்.. டார்கெட் பண்ணி அடித்த வாட்சன்!! வீடியோ

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், சரியான நேரத்தில் வாட்சன் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். இது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி, சன்ரைசர்ஸ் பவுலர்களின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார். 
 

shane watson vs rashid khan clash video
Author
Chennai, First Published Apr 24, 2019, 11:27 AM IST

ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம்போலவே இந்த சீசனிலும் சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. 16 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பிளே ஆஃப் சுற்றில் எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்திருந்தாலும், அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பிவந்தனர். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் டாப் ஆர்டர்கள் சரியாக ஆட வேண்டும் என சிஎஸ்கே கேப்டன் தோனி காட்டமாக தெரிவித்திருந்தார். 

shane watson vs rashid khan clash video

இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே சரியாக ஆடாமல் திணறிவந்த வாட்சன், சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக ஆடி, 96 ரன்களை குவித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை தேடிக்கொடுத்தார். சதத்தை தவறவிட்டு கடைசி நேரத்தில் அவர் ஆட்டமிழந்தாலும் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணம் வாட்சன் தான். 

பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நெருங்கிவிட்ட நிலையில், சரியான நேரத்தில் வாட்சன் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். இது சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி, சன்ரைசர்ஸ் பவுலர்களின் பந்துவீச்சை தெறிக்கவிட்டார். 

shane watson vs rashid khan clash video

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர பவுலர் ரஷீத் கானின் பந்துவீச்சை டார்கெட் செய்து தாறுமாறாக அடித்தார். ரஷீத் கான் பந்துவீச வந்ததும் இரண்டாவது பந்தையே பவுண்டரிக்கு அனுப்பினார் வாட்சன். இதையடுத்து வாட்சனை பார்த்து ரஷீத் கான் முறைக்க, வாட்சனும் முறைத்துவிட்டு சென்றார். பின்னர் ரஷீத் கான் வீசிய ஓவர்களில் எல்லாம் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்தார் வாட்சன். ரஷீத் கானின் ஓவரில் ரன்கள் அதிகமாக அடிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், ரஷீத் கானின் மீது அழுத்தம் அதிகரித்திருந்தது. அந்த நிலையில் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு ரஷீத் கானை வெறித்து பார்த்தார் வாட்சன். வாட்சன் - ரஷீத் கான் முறைப்பு நேற்றைய போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டியது. ரஷீத் கான் ஆரம்பத்தில் முறைக்க, அதன்பின்னர் அவரது ஓவரை டார்கெட் செய்து அடித்து மிரட்டினார் வாட்சன். 

Follow Us:
Download App:
  • android
  • ios