Zero Shadow Day 2023 : இன்று நிழல் விழாது தெரியுமா? பெங்களூருவில் நடக்கும் அரிய நிகழ்வு - ஏன், எப்படி.?
இன்று "ஜீரோ ஷேடோ தினம்" என்றழைக்கப்படும் அரிய நிகழ்வு வானில் தோன்ற உள்ளது. அதைப் பற்றி முழுமையாக காணலாம்.
பெங்களூருவில் இன்று "ஜீரோ ஷேடோ தினம்" என்று அழைக்கப்படும் ஒரு அரிய வான நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஜீரோ ஷேடோ என்பது நிழல் பொருட்களின் மீது விழாமல் இருப்பது என்று சொல்லலாம். இன்று (ஏப்ரல் 25) பெங்களூரு நகரத்தில் உள்ள செங்குத்து பொருட்கள் மீது எந்த ஒரு நிழலும் விழாது. இதனை பூஜ்ஜிய நிழல் நாள் என்றும், நிழல் இல்லா தினம் என்றும் கூறலாம்.
பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) இந்த வரலாற்று நாளைக் குறிக்கும் வகையில் அதன் வளாகத்தில் பல நிகழ்வுகளை நடத்தவுள்ளது. இந்த நிழல் இல்லா நாள் ஏப்ரல் 25, மதியம் 12.17 மணிக்கு நடக்க உள்ளது. இந்த முறை பெங்களூரில் ஜீரோ ஷேடோ தினம் அனுசரிக்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில், ஒடிசாவின் புவனேஸ்வர் ஒரு ஜீரோ ஷேடோ தினம் கொண்டாடப்பட்டது.
இதையும் படிங்க..12 மணி நேர வேலை யார் யாருக்கு? எந்த நிறுவனங்களுக்கு பொருந்தும்? முழு விபரம்
+23.5 மற்றும் -23.5 டிகிரி அட்சரேகைக்கு இடைப்பட்ட இடங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை 'பூஜ்ஜிய நிழல் நாள்' எனப்படும் தனித்துவமான வான நிகழ்வு நிகழ்கிறது. இந்த நேரத்தில் சூரியன் வானத்தில் அதன் மிகப்பெரிய நிலையில் இருக்கும் போது, உயிருள்ள உயிரினங்களோ அல்லது உயிரற்ற பொருட்களோ எந்த நிழலையும் வீசுவதில்லை. சூரியன் துல்லியமாக உச்சநிலையில் இருக்கும்போது, அது ஒரு பொருளின் மீது நிழலை வீசாது என்று இந்திய வானியல் சங்கம் (ASI) கூறுகிறது.
"+23.5 மற்றும் -23.5 டிகிரி அட்சரேகைகளுக்கு இடையில் வாழும் மக்களுக்கு, சூரியனின் சரிவு அவர்களின் அட்சரேகைக்கு இரண்டு முறை சமமாக இருக்கும். ஒரு முறை உத்தராயணத்தின் போது மற்றும் ஒரு முறை தட்சிணாயனத்தின் போது. இந்த இரண்டு நாட்களில், சூரியன் மதியம் சரியாக மேல்நோக்கி இருக்கும்.
சூரியனின் சரிவு இருப்பிடத்தின் அட்சரேகையுடன் பொருந்தும்போது, இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இது ஒரு கணம் நீடித்தாலும், அதன் தாக்கத்தை இரண்டு நிமிடங்கள் வரை உணர முடியும். உண்மையான நிகழ்வு ஒரு வினாடி மட்டுமே நீடிக்கும், ஆனால் அதன் விளைவுகள் 1.5 நிமிடங்கள் வரை காணப்படுகின்றன.
இதையும் படிங்க..அவரே வந்துட்டாரா.! கிறிஸ்துவ சமூக ஓட்டு இனி பாஜகவுக்கு தான்.. கேரளா விசிட்டில் சிக்சர் அடித்த மோடி!!