யூடியூபர் மூன்றாவது திருமணம்… அவரது இரண்டு கர்ப்பிணி மனைவிகள் சண்டையிடும் வீடியோ வைரல்!!
யூடியூபர் அர்மான் மாலிக்கின் தனது மூன்றாவது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூடியூபர் அர்மான் மாலிக்கின் தனது மூன்றாவது மனைவியை தனது இரு கர்ப்பிணி மனைவிகளுக்கு அறிமுகப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூபர் அர்மான் மாலிக் தனது வீடியோக்கள் மற்றும் அவரது இரு மனைவிகளால் பிரபலமடைந்தார். பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு மனைவிகள் அவருக்கு உள்ளன. அன்மையில் தனது இரு மனைவிகளின் புகைப்படங்களை அர்மான் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் அவரது இரு மனைவிகளும் கர்பமான இருந்தனர். இதனால் அவர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: பிபிசி ஆவணப்பட தடைக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அதில், அர்மான் தனது மனைவியை அறிமுகப்படுத்தினார். அர்மானும் அவரது மூன்றாவது மனைவியும் திருமண மாலைகளுடன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அர்மான் மாலிக்கின் மூன்றாவது மனைவியின் பெயர் லக்ஷ்யா. கர்ப்பிணி மனைவிகள் இருவருக்கும் தனது மூன்றாவது மனைவியை அறிமுகம் செய்து வைக்கிறார். அவரை பார்த்ததும் இரு மனைவிகளும் சண்டை போடுகிறார்கள். முன்னதாக பயலும் கிருத்திகாவும் நடைப்பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருகின்றனர். அங்கு அவர்கள் சோபாவில் அமர்ந்த போது காலிங் பெல் அடிக்கிறது. கிருத்திகா சென்று கதவைத் திறக்கிறார்.
இதையும் படிங்க: வெடித்த அதானி விவகாரம்: உடும்புபிடியில் எதிர்க்கட்சிகள்! நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைப்பு
அப்போது அர்மான் மாலை அணிந்து வீட்டிற்குள் நுழைந்து கிருத்திகாவையும் பயலையும் கண்களை மூடச் சொன்னார். இரண்டு மனைவிகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர் அர்மான் தனது கையைப் பிடித்துக் கொண்டு லக்ஷ்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்து, பயல்-கிருத்திகாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார். அர்மானின் இரு மனைவிகளின் கால்களையும் லக்ஷ்யா தொடுகிறார். ஆனால் பயலும் கிருத்திகாவும் ஆத்திரமடைந்தனர். அப்போது அர்மான் மாலிக் அவர்களிடம் இது ஒரு பிராங்க் என்றார். ஆனால் அவரது இரு மனைவிகளும் அதனை நம்பவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.