பெங்களூரு விமான நிலையம்.. புக்கிங் ஏஜென்ட் பணி செய்து வந்த இளம் பெண் மாயம் - ஏர்போர்ட்டில் தொடரும் மர்மம்!

Woman Missing in Bengaluru Airport : பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள முனையம் ஒன்றில் பணி செய்து வந்த பெண் ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young Woman Working as booking agent in bengaluru Kempegowda airport terminal 1 went missing ans

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1ல் உள்ள கால்டாக்ஸி நிறுவனத்தில் முன்பதிவு செய்யும் முகவராக பணிபுரிந்து வருகின்றார் ஒரு 27 வயது பெண். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவரை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவரது சகோதரர் கெம்பேகவுடா விமான நிலைய காவல் நிலையத்தில் நேற்று புதன்கிழமை புகார் அளித்துள்ளார். 

போலீசார் கூற்றுப்படி, கர்நாடகாவில் உள்ள துமகுருவை சேர்ந்த நேத்ரா என்ற அந்த பெண், WIT கேப் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹுனசமரனஹள்ளியில் உள்ள ‘யமுனா’ என்ற தங்கும் விடுதியில் வசித்து வந்துள்ளார் அவர். “தினமும் தன் குடும்பத்தினரை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் வழக்கம் உள்ளவர் அவர் என்றும் கூறப்படுகிறது. 

‘ரத்தம் விற்பனைக்கு இல்லை’: இதை தவிர அனைத்து கட்டணங்களையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு அதிரடி முடிவு..

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 29 அன்று, அந்த பெண் மதியம் தனது குடும்பத்தாருக்கு போன் செய்து, அன்று தனக்கு இரவுப் பணி இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் டிசம்பர் 30 முதல், அவரது குடும்பத்தினருக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அவரது குடும்பத்தினர் அழைத்தபோது, ​​அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

ஒருவேளை சார்ஜ் இல்லாமல் இருக்கும் என்று அவர்கள் கருத, டிசம்பர் 31 அன்றும் அவருக்கு அழைத்தபோதும் கூட அவருடைய போன் அணைத்துவைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து கவலையடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேத்ராவின் சகோதரர் மகேஷ் குமார், ஜனவரி 2 அன்று WIT-க்கு சென்று என்ன நடந்தது என்று கேட்தறிந்துள்ளார். 

நேத்ரா தனது இரவு பணியை முடித்துக் கொண்டு டிசம்பர் 29 அன்று காலை 6 மணிக்கு கிளம்பிவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு தேடியும் இப்பொது வரை அந்த பெண் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரியவில்லை. FIR பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன அந்த பெண்ணை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு மாதத்திற்குள் பெண் ஒருவர் காணாமல் போவது இது இரண்டாவது முறையாகும். மேலும் கடந்த நான்கு மாதங்களில் விமான நிலைய காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள நான்காவது எஃப்ஐஆர் பதிவு இதுவாகும். கடந்த டிசம்பர் 3, 2023 அன்று, இண்டிகோவின் கார்கோ பிரிவில் பணிபுரியும் 22 வயது பெண்ணின் தாயான ஒரு பெண்மணி காணாமல் போயுள்ளார். 

அதே போல டிசம்பர் 4 ஆம் தேதி, பெங்களூரில் இருந்து பீகாருக்கு விமானத்தில் சென்ற ஒருவர் பீகாருக்கு சென்றடையவில்லை. விமான நிலையத்திற்குள் அவர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதே போல செப்டம்பர் 17, 2023 அன்று, டெல்லியில் இருந்து விமானத்தில் வேலைக்குச் சென்ற சிகையலங்கார நிபுணர் ஒருவர் டெர்மினல் 1ல் இருந்து மாயமானார்.

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி.. ஏன்? அவருடைய உடல் எங்கே? CCTV உதவியால் தேடிவரும் போலீசார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios