Asianet News TamilAsianet News Tamil

நாய் குரைத்ததால் வந்த ஆத்திரம்.. எட்டி உதைத்ததில் 65 வயது பெண் மரணம் - என்ன நடந்தது? குற்றவாளி யார்?

Woman Got Killed in MP : மத்திய பிரதேசத்தில் நாய் குரைத்த விவகாரத்தில் 65 வயது பெண்மணி ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young man accused of killing woman after her dog barks at him man arrested ans
Author
First Published Dec 24, 2023, 12:12 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில், செல்ல நாய் ஒன்று தொடர்ந்து குரைத்ததால், ஒரு 65 வயது பெண்ணுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், 35 வயது நபர் ஒருவர் அந்த பெண்ணைக் கொன்றதாக போலீசார் இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 24ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பத்தன்று இந்தூர் நகரில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர், வழக்கம் போல தனது கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு முசகெடி பகுதியில் அவர் சென்றபோது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இரவு சுமார் 10.30 மணியளவில், அவர் ஒரு சமுதாயக் கூடம் அருகே சென்றுள்ளார். 

வாக்குறுதிகளை நிறைவேற்ற மீண்டும் கடன் வாங்கும் ம.பி. பாஜக அரசு!

அப்போது அப்பகுதியில் இருந்த ​​ஒரு நாய் அவரைத் பார்த்து தொடர்ந்து குரைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த அந்த நபரால் அந்த சாலையைக் கடந்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக ஆசாத்நகர் காவல் நிலையப் பொறுப்பாளர் நீரஜ் மேதா கூறினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த நபர், உரத்த குரலில் அந்த நாயை நோக்கி சத்தமிட துவங்கியுள்ளார். 

இந்த சூழலில் அந்த நபரின் சத்தத்தையும், தொடர்ந்து நாய் குரைக்கும் சத்தத்தையும் கேட்டு, அந்த நாயின் உரிமையாளரான 65 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது நாய் குரைத்தது குறித்து அந்த நபருக்கும், 65 வயது பெண்மணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அது வளர்ந்து பெரும் வாய் சண்டையாக மாறியுள்ளது. 

இந்த சூழலில் சண்டை முற்றிப்போக, அந்த நபர் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததாகவும், அவர் சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்த சிலர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரபிக்கடலில் 20 இந்தியர்களுடன் சென்ற சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

அதைத் தொடர்ந்து இந்த விஷயம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று அதிகாரி ஒருவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் இப்பொது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios