Asianet News TamilAsianet News Tamil

இளம் வயது விமான பணிப்பெண்.. பூட்டிய அறையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த உடல் - இந்த கொடூரத்தை செய்தது யார்?

சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூபால் ஓக்ரே என்ற 25 வயது இளம் பெண், ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது சொந்த ஊரில் இருந்து மும்பை நகருக்கு பணிநிமிர்தமாக இடம் பெயர்ந்துள்ளார்.

Young Air Hostess Trainee Rupa Ogrey Found Dead in her Apartment one arrested ans
Author
First Published Sep 4, 2023, 4:17 PM IST

மும்பை நகருக்கு வந்து ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்த அந்த இளம் பெண், மும்பை புறநகர் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூபால் என்ற அந்த இளம் பெண், தனது சகோதரி மற்றும் ஆண் நண்பருடன் அந்த குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

அந்தேரி பகுதியில் அவர்கள் மூவரும் வசித்து வரும் நிலையில், அந்த ஆண் நண்பர் மற்றும் அவரது சகோதரி ஆகிய இருவரும் சில தினங்களுக்கு முன்பு தான் அவர்களது சொந்த ஊருக்கு சென்றதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரூபால் கொலை தொடர்பாக, அந்த அப்பார்ட்மென்டில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரியும் 40 வயது நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

பைக்கில் சென்ற அதிமுக பெண் கவுன்சிலருக்கு கத்தி குத்து..! மறைந்து இருந்து தாக்கிய நபர் யார்.? போலீசார் விசாரணை

தற்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், "முக்கிய குற்றவாளியான விக்ரம் அத்வால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், மேலும் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பாதுகாப்பு கேமராக்கள் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. 

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அதே அப்பார்ட்மென்டில் பணிப்பெண்ணாக பணிபுரியும் விக்ரம் அத்வாலின் மனைவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கொலை நடந்த அன்று, ரூபாலின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு பல முறை போன் செய்தும், அவர் எடுக்காத நிலையில், அவருடைய நண்பர்களின் உதவியை நாட, அவர்கள் அவர் வீட்டுக்கு சென்று கதவை தட்டியபோது அது உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதன் பிறகு போலீசார் வரவழைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டது. 

அப்போது ரூபால் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம் வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சமத்துவம் அந்தேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நோய் பாதிக்கப்பட்ட சகோதரியை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற அண்ணன்; உடுமலையில் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios