காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதில் தேர்தல் ஆணையம் தவறு செய்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதிலளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவதில் தேர்தல் ஆணையம் தவறு செய்வதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதிலளித்துள்ளார். ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்க பதிவில் “ அக்னிவீர் திட்டத்தை அரசியலாக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டுவது தவறு. அரசியலாக்குவது என்றால் என்ன? இந்திய தேர்தல் ஆணையம் என்றா விமர்சனம் என்று அரத்தமா? 

அக்னிவீர் என்பது ஒரு திட்டம், அரசின் கொள்கை சார்ந்த விஷயம். அரசாங்கத்தின் கொள்கையை விமர்சிப்பதும், ஆட்சிக்கு வந்தால் அத்திட்டம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பதும் எதிர்க்கட்சி அரசியல் கட்சியின் உரிமை.

புயல் வேகத்தில் பாய்ந்த கார்... அமெரிக்காவில் பயங்கர விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவர்கள் பலி!

ஒன்றாகச் சண்டையிடும் இரண்டு வகை வீரர்களை அக்னிவீர் திட்டம் உருவாக்குறது. அது தவறு, இந்த திட்டத்தின் படி, ஒரு இளைஞனை நான்கு வருடங்கள் வேலைக்கு அமர்த்திவிட்டு, வேலையும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் தூக்கி எறியப்படலாம். அது தவறு. அக்னிவீர் இராணுவத்தால் எதிர்க்கப்பட்டது, ஆனால் அரசாங்கம் இராணுவத்தின் மீது திட்டத்தை திணித்தது, அது தவறு. எனவே, அக்னிவீர் திட்டத்தை கைவிட வேண்டும்

காங்கிரஸ் கட்சிக்கு வழிகாட்டுதல் வழங்குவதில் தேர்தல் ஆணையம் மிகவும் தவறாக செயல்படுகிறது., ஒரு குடிமகனாக, தேர்தல் ஆணையம் மிகவும் தவறாக செயல்படுகிறது என்று சொல்வது எனது உரிமை.” என்று கூறியிருந்தார்.

புல்வாமா தாக்குதலில் தொடர்பு... முதியவரை மிரட்டி ரூ.32 லட்சம் அபேஸ் செய்த வாட்ஸ்அப் மோசடி கும்பல்!

அவரின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “ உங்களை நீங்களே சங்கடப்படுத்திக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் சிதம்பரம் அவர்களே. உங்களது தலைவரின் வெட்கமற்ற, அவநம்பிக்கையான, மன்னிக்க முடியாத, பிளவுபடுத்தும் அரசியலை பாதுகாத்தல் என்பதை தாண்டி தற்போது ராணுவத்தை வெட்கமற்ற பொய்களால் பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள். அதை நான் இங்கு மீண்டும் செய்ய மாட்டேன்.

Scroll to load tweet…

பிரதமரின் எந்த கொள்கையையும் நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களைப் பற்றி பொய் கூறி ,அந்தப் பொய்களைப் பயன்படுத்தி மக்களை பிரிக்க முடியாது. உங்கள் நினைவாற்றலைப் புதுப்பிக்க, 19(2) ல் உள்ள உங்கள் பழைய சட்டப் புத்தகங்களைப் படிக்கவும்.

காங்கிரஸின் பிரித்தாளும் கொள்கைக்காக நமது ராணுவத்தை தவறுதலாக கூட பயன்படுத்த முடியாது. நீங்கள் எந்த வம்சத்தில் இருந்து வருகிறீர்கள், யாரிடம் பிரார்த்தனை வைக்கிறீர்கள், உங்கள் அரசியல் என்ன என்பதைப் பற்றி எல்லாம் ஆயுதப் படைகளில் உள்ள ஆண்களும் பெண்களும் கவலைப்படுவதில்லை.

ஆனால், அவர்கள் அதீத அக்கறையுடன், இந்தியாவை ஒன்றிணைக்க, இந்தியாவைப் பாதுகாப்பதற்கு, இந்தியாவைப் பெருமைப்படுத்துவதற்கு, நமது எதிரிகளைப் பயமுறுத்துவதற்கு இடைவிடாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இவை எல்லாம் உங்களது வாரிசு அரசியலுக்கு முற்றிலும் நேர்மாறானவை. எந்த சாதனையையும் நீங்கள் நிகழ்த்தவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறீர்கள். எதிரிகளுடன் கை கோர்க்கிறீர்கள். டோக்லாமில் நமது வீரர்களின் வீரத்தை சந்தேக்கிறீர்கள். உரி சர்ஜிக்கள் ஸ்டிரைக்கை விமர்சிக்கிறீர்கள். ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் திட்டத்தை மறுக்கிறீர்கள் என்று ப. சிதம்பரத்திற்கு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார்.