yogi ordered to give 18 hours electricity to villages
உத்தரப்பிரதேசத்தின் உள்ள கிராமங்களில் முறையான மின்சார சப்ளை இல்லை என்ற புகாரையடுத்து, கிராம மக்களுக்கு குறைந்தபட்சம் 18 மணி நேரம் தடையில்லா மின்சார சப்ளை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
புதிய முதல்வர்
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. அங்கு முதல்வராக கோரக்பூர் எம்.பி.யும், மடாதிபதியுமான யோகிஆதித்ய நாத் பொறுப்பு ஏற்றார். இவர் பதவி ஏற்றதில் இருந்து பல அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஆம்புலன்ஸ் பெயரில் சமாஜ்வாதி
முந்தைய சமாஜ்வாதி ஆட்சியில் அனைத்து மக்கள் நலத்திட்டங்களின் பெயரிலும் ‘சமாஜ்வாதி’என்ற பெயரை சேர்த்திருந்தனர். மக்களுக்கு பயன்படும் ஆம்புலன்ஸ் சேவையில் கூட ‘சமாஜ்வாதி ஆம்புலன்ஸ்’ சேவை என்று பெயரிட்டு இருந்தனர்.
முன்னாள் முதல்வர் அகிலேஷ் முதல்வர் ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன்கார்டுகளில் கூட அகிலேஷ் யாதவின் புகைப்படம், சமாஜ்வாதியின் பெயர் இடம் பெற்று இருந்தது.
நீக்கம்
இந்நிலையில், ‘சமாஜ்வாதி ஆட்சியில் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட இருந்த அகிலேஷ் யாதவ் படம் கொண்ட 60 லட்சம் ரேஷன் கார்டுகளை வழங்கக்கூடாது என்று புதிதாக பதவி ஏற்ற முதல்வர்ஆதித்ய நாத் உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், அடுத்த அதிரடியாக, அனைத்து மக்கள் நலத்திட்டங்களிலும் சமாஜ்வாதி என்ற பெயரை நீக்கி, அதில் முதல்வர் என்ற பெயரை சேர்க்கவும் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சமாஜ்வாதிஆட்சியில் செயல்படுத்த அனைத்து மக்கள் நலத்திட்டங்களிலும் அந்த கட்சியின் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தது. இந்த பெயரை நீக்கிவிட்டு, முதல்வர் என்ற பெயரை சேர்க்க முதல்வர்ஆதித்தய நாத் உத்தரவிட்டுள்ளார்.

18 மணிநேர மின்சாரம்
அதுமட்டுமல்லாமல், மாவட்ட தலைநகரங்களுக்கு 24 மணிநேரம் தடையில்லா மின்சார சப்ளையும், வட்டார பகுதிகளில் 20 மணிநேரம் மின்சாரமும், கிராமப்புறங்களில் 18 மணிநேரமும் மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கிராமங்களில் மாலை 6மணி முதல் காலை 6மணிவரை தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
அடுத்த 100 நாட்களுக்குள் 5 லட்சம் புதிய மின் இணைப்புகள், வலுவான, திறன்வாய்ந்த ‘டிரான்ஸ்பார்மர்களை’ நகரங்களில் 24 மணிநேரத்துக்குள்ளும், கிராமங்களில் 48 மணிநேரத்துக்கு மிகாமலும் சரிசெய்து பொருத்தப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
